- துர்க்மெனிஸ்தானில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து இயற்கை எரிவாயு குழாய் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
- விமானங்களை விட வேகமாக செல்லும் ஹபர்லூப் போக்குவரத்து சேவையை துபாய் நாட்டில் அறிமுகம் செய்ய உள்ளது.
- அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இஸ்ரேல் ஜெருசலேம் நகரில் அமெரிக்க தூதரகம் மே மாதம் அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
- ஆசிய வளர்ச்சி வங்கி பீகாரில் இரண்டு குடிநீர் விநியோக திட்டத்திற்காக ரூ544 கோடி கடன் வழங்கி உள்ளது.
- இந்தியா கனடா நாடுகளுக்கிடையே தொழில்,மின்சாரம், கல்வி,மருத்துவ சேவை,தகவல் தொழில்நுட்பம்,அறிவியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட ஆறு ஒப்பந்தங்கள் கையெழுத்து போடப்பட்டுள்ளது.
- ஊட்டச்சத்து குறைபாடுடன் குஜராத்தில்11 லட்சம் குழந்தைகள் உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
- பிரதமர் மோடி தலைமையில் லோக்பால் அமைக்க மார்ச் 1ல் கூட்டம் நடைபெற உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையை அடுத்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு மடங்கு உயர்த்த திட்டமிட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.
- மத்திய அரசு தேசிய கல்வி நிறுவனங்கலின் கட்டமைப்பை தரவரிசை பட்டியல் வெளியிட முடிவு செய்துள்ளது.
- இந்தியா கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி 20 ஓவர் போட்டிகளின் தரவரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ளார்.
- இந்தியா மகளிர் ஹாக்கி அணியின் கேப்டனாக ராணி ராமபால் தென் கொரியா போட்டிகளில் பங்கேற்க உள்ளார்.
- 23 வது குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யா ஃபிகர் ஸ்கேட்டிங் பிரிவில் முதல் தங்க பதக்கம் வென்றுள்ளது.
- இந்தியா 63வது ஸ்டார்ன்ட்ஜா நினைவு குத்துச்சண்டை போட்டியில் 11 பதக்கங்களை உறுதி செய்துள்ளது.
- இந்தியா இராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு மூலம் வடிவமைக்கப்பட்ட 'தனுஷ்' ஏவுகனை சோதனை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
- சத்யபிரதா சாஹூ தமிழகத்தின் புதிய தேர்தல் ஆணைய அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- இந்திய ஓவர்சீஸ் வங்கி, தூய்மை இந்திய திட்டத்தின் கீழ் கழிப்பறைகள் கட்ட புதிய திட்டதை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ரூ 20,000 வரை கடன் வழங்கப்படவுள்ளது
- நடப்பு நிதியாண்டில் இந்தியாவில் அந்நிய முதலீடு ரூ 3594 கோடியாக உள்ளது.
- மொபைல் போன் ஆய்வு நிறுவனமான தி ஸ்டேட் ஆப் எல்டிஇ 4ஜி அலைவரிசை வேகத்தை 88 நாடுகளில் அளவிட்டுள்ளது. இதில் பாகிஸ்தான் சவுதி அரேபியா கஜகஸ்தான் இலங்கை ஆகிய நாடுகளை விட இந்தியாவில் வேகம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
- நேஷனல் ஹெரால்ட் பத்திரிக்கையின் தலைமை ஆசிரியர் நீலப் மிஸ்ரா காலமானார்.
TNPSC Tamil Current Affairs 24th February 2018
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment