Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 4th February 2018

உலக செய்திகள்
 1. சீனாவில் வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக நடைபெறும் விளக்குத் திருவிழா பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.
 2. தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் உள்ள லா பேஸ் மற்றும் சக்ரே (( La Paz and Sucre)) நகரங்களை பாரம்பரியமிக்க நகரங்களாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
 3. ரஷ்யாவின் அணு ஆயுத பலம் கூடுவதாக கருதும் அமெரிக்கா, தனது அணு ஆயுத பலத்தையும் அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
 4. மின்காந்தங்களை கொண்டு இயங்கும் துப்பாக்கிகளை உலகிலேயே முறையாக சீனா கண்டுபிடித்துள்ளது.
 5. அமெரிக்க, இங்கிலாந்து, ரஷ்யா, ஜப்பான் மற்றும் கனடா உள்பட 17 ஐரோப்பிய நாடுகளின் விண்வெளிகளாகங்கள் சேர்ந்து 150 பில்லியன் டாலர் செலவில் பூமிக்கு மேலே விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை உருவாக்கி வருகின்றன.
தேசிய செய்திகள்
 1. ராணுவப் பணிகளுக்கான ரோபாட்டுகள் மனிதர்களைப் போலவே அவ்வப்போது தவறுகளைத் திருத்திக் கொண்டு செயல்படும் விதத்தில் புதிய அல்காரிதம் ஒன்றை அமெரிக்க ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
 2. பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜம்மு காஷ்மீரின் லடாக் மண்டலத்துக்குச் சென்று ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
 3. 2017-ம் ஆண்டு மட்டும் மிகப்பெரும் பணக்காரர்கள் 7 ஆயிரம் பேர் இந்தியாவை விட்டு வேறு நாடுகளுக்குப் புலம் பெயர்ந்திருப்பதாக நியூ வேர்ல்ட் வெல்த் நிறுவனம் உலகளாவிய ஆய்வறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.
 4. மும்பை விமான நிலையம் 24 மணி நேரத்தில் 980 விமானங்களை கையாண்டு, தனது முந்தைய சாதனையை முறியடித்துள்ளது. ஒரே ஓடு தளத்தை கொண்ட மிகவும் பரபரப்பான விமான நிலையம் மும்பை விமான நிலையமாகும்.
 5. ஆட்டோ கட்டணத்தைவிட விமானக் கட்டணம் குறைந்துள்ளதாக விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்கா தெரிவித்துள்ளார்.
 6. கின்னஸ் சாதனை முயற்சிக்காக ஒரே நேரத்தில் 2,500 ஜோடிகளுக்கு நாளை குஜராத்தில் திருமணம்
வர்த்தக செய்திகள்
 1. இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகையை மூன்றாண்டுகளில் இருமடங்காக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.
 2. மத்திய அரசு பணிகளில் இரண்டரை லட்சம் பேர் பணியமர்த்தப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 3. தனிநபர்கள் பயன்பாட்டுக்கான நவீன ரக குட்டிவிமானத்திற்கு வாகனா (Vahana) எனப்பெயரிடப்பட்டதில், இந்தியாவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என ஏர் பஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
 1. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி
 2. இந்திய ஓபன் பாட்மிடடேன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
 1. சந்திராயன்-2 விண்கலத்தின் ஆய்வூர்தியை நிலவின் தென் துருவத்தில் இறக்க திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ முன்னாள் தலைவர் கிரண்குமார் தெரிவித்துள்ளார்.
இரங்கல்

 1. இந்திய ராணுவத்தின் முன்னாள் தளபதிகளில் ஒருவர் ரவீந்திர குமார் பாலி (Ravindra Kumar Bali) இயற்கை எய்தினார்.

No comments:

Post a Comment