Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 9th February 2018

உலக செய்திகள்
 1. கூகுள் நிறுவனம், தேடுதளத்தில் பாரபட்சமாக நடந்து கொள்ளுவதாக தொடரப்பட்ட வழக்கில் கூகுள் நிறுவனத்திற்கு 135 கோடியே 86 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
 2. உலகில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாகும் நாடுகளின் பட்டியலில் தென்கொரியா முதலிடத்திலும் ஸ்வீடன் இரண்டம் இடத்திலும் சிங்கப்பூர் மூன்றாம் இடத்திலும் உள்ளன மேலும் அமெரிக்கா 11வது இடத்தில் உள்ளது.
 3. உலக தமிழ் பெண்கள் மாநாடு மார்ச் 8ஆம் தேதி மலேசியாவில் நடைபெறவுள்ளது.
 4. மாலத்தீவு வெளியிட நட்பு நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெறவில்லை .
தேசிய செய்திகள்
 1. 2030ம் ஆண்டு முதல் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களை மட்டுமே இயக்குவது என இந்தியா இலக்கு நிர்ணயித்த போதிலும், பெட்ரோல் மற்றும் டீசல் கொள்முதல் அதிகரித்தே வருகிறது.
 2. சுகாதார திட்டங்களை செயல்படுத்தும் மாநிலங்கள் தொடர்பாக நிதி ஆயோக் வெளியிட்ட பட்டியலில் கேரளா முதலிடம் பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பஞ்சாப், தமிழ்நாடு, குஜராத் ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன
 3. ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தைப் போலவே தோற்றமளிக்கும் போலி இணையத்தளம் குறித்துப் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
 4. ஐ.சி.சி.யின் முதல் சுதந்திரமான பெண் இயக்குநராக இந்திரா நூயி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 5. Mathletics Hall of Fame என்ற கணக்கு புதிர் போட்டித் தேர்வில் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட 8 வயது சிறுமி சாதனை
 6. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு வங்கிகளில் பெரும் தொகை டெபாசிட் செய்தவர்கள் மார்ச் 31ஆம் தேதிக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விளையாட்டு செய்திகள்
 1. 23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவில் இன்று தொடங்கியது.
 2. சிறுவர்களுக்கான இந்திய ஹாக்கி விளையாட்டு போட்டியில் ஒடிஷா முதலிடத்தை வென்றது
 3. தென்கொரியாவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியை ஒளிபரப்புவதற்கான உரிமையை ஜியோ நிறுவனம் பெற்றுள்ளது,
வர்த்தக செய்திகள்
 1. 2030ம் ஆண்டு முதல் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களை மட்டுமே இயக்குவது என இந்தியா இலக்கு நிர்ணயித்த போதிலும், பெட்ரோல் மற்றும் டீசல் கொள்முதல் அதிகரித்தே வருகிறது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
 1. எலோன் மஸ்க் விண்வெளிக்கு அனுப்பிய "ஸ்டார்மேன்", செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கு இடையேயான குறுங்கோள் பட்டையை நோக்கி பயணிப்பதாகக் கூறப்படுவது குறித்து வல்லுநர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
 2. மனிதக் கரு முட்டைகளை முழு முதிர்ச்சி அடையும் வரை ஆய்வகத்தில் வளர்ப்பதில், அறிவியலாளர்கள் வெற்றி கண்டுள்ளளனர். Molecular Human Reproduction என்ற மருத்துவ ஆய்விதழில் எடின் பர்க்கில் உள்ள மருத்துவமனை ஆய்வகத்திலும், நியூயார்க்கில் உள்ள மனித இனப்பெருக்க ஆய்வு மையத்திலும் நடத்திய சோதனை முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
 3. விண்ணுக்கு அனுப்பப்பட்ட டெஸ்லா கார் இலக்கில் களமிறங்காமல் தொடர்ந்து விண்வெளியில் பயணிக்கிறது
 4. அறிவியல் தொழில் நுட்பம் தொடர்பான ஆய்வு மாணவர்களுக்கு மாதம்தோறும் 70 ஆயிரத்தில் இருந்து 80 ஆயிரம் ரூபாய் வரையில் உதவித் தொகை வழங்கும் திட்டம்
நியமனம்
 1. இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஜோர்டானுக்கான புதிய தூதராக அமீர் வெய்ஸ்ப்ரட்டை நியமித்துள்ளதுNo comments:

Post a Comment