Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Currrent Affairs 23rd February 2018

உலக செய்திகள்
 1. Nest Cam IQ கண்காணிப்பு கேமராவுக்கு Google Assistant இணைப்பு வழங்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. Nest Cam IQ கேமராக்கள் உள்ளரங்க கண்காணிப்புகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன
 2. துபாயில் சாகசம் புரிவதற்காக அமைக்கப்பட்டுள்ள கம்பிப்பாதை, சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளது. உயரமான கட்டிடங்கள் இடையே ஆயிரம் மீட்டர் தூரத்துக்கு இந்த கம்பிப்பாதை நிறுவப் பட்டுள்ளது.
 3. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சார்பில் அண்மையில் விண்ணில் ஏவப்பட்ட செயற்கைக் கோள்களில், அதிவேக இணையதள சேவையை வழங்கக் கூடிய இரு செயற்கைக் கோள்களும் அடங்கும்.
 4. உலகிலேயே முதல் முறையாக ரஷ்யவில் உள்ள அணு உலைக்கு பாதுகாப்பு கட்டமைப்புகளுடன் கட்டப்பட்டுள்ள அணுஉலை என்ற சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது
 5. நீர்முழ்கி கப்பல்களை கண்டறிந்து மீட்கும் அதிநவீன கருவிகளை இந்திய கடற்படைக்கு வழங்க இருப்பதாக பிரிட்டன் பாதுகாப்பு கருவிகள் தயாரிக்கும் நிறுவனமான ஜேஎஃப்டி தெரிவித்துள்ளது
 6. காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் ஜெர்மனியில் சொந்த வாகன பயன்பாட்டை குறைக்கும் விதமாக இலவச பேருந்து வசதியை அந்நாடு அறிமுகப்படுத்தியுள்ளது
இந்திய செய்திகள்
 1. கர்நாடக மாநிலத்தில் விவசாயி ஒருவர் மனைவிக்கு கோவில் கட்டி வழிபாடு செய்து வருகிறார்.
 2. இந்தியவிலேயே போர் விமானங்களை தயரிக்கும் பொருட்டு வெளிநாட்டுத் தொழில்நுட்ப உதவியுடன் ஒற்றை எஞ்சின் கொண்ட போர் விமானங்களைத் தயாரிக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டுவிட்டது.
 3. H-1B விசா கால அளவில் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது இதில் “ஆன் சைட்” பணி இருக்கும் வரை மட்டுமே Visa வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது
 4. இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே எரிசக்தி, உயர்கல்வி உள்ளிட்ட 6 துறைகள் சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.எரிசக்தி, வர்த்தகம், உயர்கல்வி, தகவல் தொழில்நுட்பம், பாதுகாப்பு, ராணுவம், அறிவியல், மக்கள் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் இருதரப்புக்கு இடையே உறவை மேம்படுத்துவது குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
 5. நாடு விடுதலையாகி 70ஆண்டுகளுக்குப்பின் மும்பை அருகே கடலில் உள்ள எலிபண்டா தீவுக்கு மின்வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
 6. மத்திய பிரதேச பல்கலை கழக வளாகத்தில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு அதற்கு பதிலாக சைக்கிளை பண்படுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
 7. கோவா சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மனோகர் பாரிக்கர் வேலைவாய்ப்புக்கு ரூ 548 கோடியும் ரூ 144 கோடி உபரி பட்ஜெட் வருவாயாக கிடைத்துள்ளது
 8. சர்வதேச திரைப்பட விழா பெங்களூரில் தொடங்கியது
விளையாட்டு செய்திகள்
 1. தென்கொரியாவில் நடைபெற்றுவரும் குளிர்கால ஒலிம்பிக்கில் பெண்களுக்கான Ski Cross பிரிவில் கனடா வீராங்கனைகள் முதல் இரு இடங்களை தட்டிச் சென்றனர் .
 2. 23 வது குளிர்கால ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியில் அமெரிக்க அணி தங்கம் வென்றது
 3. குளிர்கால ஒலிம்பிக்கில் அரைவளைய பனிச்சறுக்கு போட்டியில் அமெரிக்க வீரர் டேவிட் வைஸ் தங்கம் வென்றது
வர்த்தக செய்திகள்
 1. இந்தியாவில் தொடர்ந்து முதலீடு செய்வோம் என உபெர் தலைமைச் செயல் அதிகாரி தாரா கோஸ்ரோஷிகி தெரிவித்துள்ளார்
 2. வருங்கால வாய்ப்பு நிதி மீதான ஈபிஎஃப்.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
 1. அணு ஆயுதம் ஏந்திச் செல்லும் திறன்படைத்த தனுஷ் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக ஏவிப் பரிசோதித்துள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள தனுஷ் ஏவுகணை 350கிலோமீட்டர் தொலைவில் உள்ள தரை இலக்கைக் குறி தவறாமல் தாக்கும் திறன் படைத்ததாகும். ஒடிசா மாநிலம் பாராதீப் துறைமுகத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் இருந்து இந்த ஏவுகணையைச் செலுத்திச் சோதித்தனர்.
 2. இரும்பு உருக்கை விட அதிக உறுதி கொண்ட அலுமினிய அலோகத்தை அமெரிக்க மற்றும் சீன விஞ்ஞானிகள் இணைந்து உருவாகியுளள்ளார். இந்த அலோகத்திற்கு அட்வான்ஸ்டு மெட்டீரியல்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது
நியமனங்கள்
 1. பாகிஸ்தானில் முதல் முறையாக பார்லிமென்ட் எம்.பி யாக இந்து மதத்தை சேர்ந்த கிருஷ்ணா குமாரி கோல்ஹி என்ற தலித் பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
 2. இந்திய கிரிக்கெட் மகளிர் அணியின் ஹர்மன்ப்ரீத் கவுர் பஞ்சாபி மாநிலத்தின் டிஎஸ்பி யாக பதவியேற்றார்

No comments:

Post a Comment