Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 10th March 2018

உலக செய்திகள்
 1. மொரீஷியசின் முதல் பெண் அதிபரான அமீனா குரிப்-ஃபகிம் (Ameenah Gurib-Fakim) பதவி விலகுகிறார்
 2. உலக செல்வந்தர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள அமேஸான் நிறுவனர் ஜெஃப் பெசோஸே வரும் ஆண்டிலும் முதலிடத்தில் இருப்பார் என ஃபோர்ப்ஸ் கணிப்புக்கள் தெரிவிக்கிறது.
 3. ராணுவ வீரர்கள் தினத்தன்று, டாங்கிகள் இல்லாமல் வாகன அணிவகுப்பை நடத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
 4. இங்கிலாந்தில் உள்ள ஸீ லைஃப் என்ற கடல்வாழ் உயிரியல் பூங்காவில் திடீரென 35 சதவீத உயிரினங்கள் இறந்து போயின.
 5. மகாத்மா காந்தி இடது கையால் கையெழுத்திட்ட அரியவகை புகைப்படம் ஒன்று அமெரிக்காவில் நடைபெற்ற ஏலத்தில் 41, 806 அமெரிக்க டாலருக்கு ஏலம் எடுக்கப்பட்டது.
 6. உலகில் அதிகமாக பயன்படுத்தப்படும் இணையதள மொழிகளில் ஆங்கிலம் முதலிடத்திலும் தமிழ் இரண்டாம் இடத்திலும் உள்ளது
தேசிய நிகழ்வுகள்
 1. இந்தோ-திபெத்திய எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த அதிகாரிகள் உள்பட 25 பேர், ஓராண்டு சான்றிதழ் கல்வி மூலம் சீன மொழியைப் பயின்று வருகின்றனர்.
 2. 32 கோடிப் பேர் ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைத்துள்ளதாகத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் தெரிவித்துள்ளார்.
 3. இந்தியா ஃபிரான்ஸ் இடையே அணுசக்தி, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் 14 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
 4. 50 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்குபவர்களின் பாஸ்போர்ட் விவரங்களை பெற பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது
 5. இந்தியா - சீனா எல்லையில் உயிரிழக்கும் வீரர்களின் குடும்பங்கள் மற்றும் காயமடையும் வீரர்களுக்கு 100 சதவீத ஓய்வூதியம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
 6. தமிழகத்தில் மேலும் 25 பொறியியல் கல்லுரிகள் மூடப்படவுள்ளன
 7. மருத்துவ படிப்பிற்கான 250 இடங்களை அதிகரித்துள்ளது தமிழக அரசு
வர்த்தக செய்திகள்
 1. ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு சரக்கு எடுத்து செல்வதற்கு இ-வே பில், ஏப்ரல் 1ம் தேதி முதல் நாடுமுழுவதும் கட்டாயமாக்கப்படுகிறது.
 2. தொழிலுக்கான அனுமதி பெறுதல் மற்றும் தொழிலை நடத்துதல் ஆகியவை கடந்த பதினைந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது எளிமையாக்கப்பட்டுள்ளதாக லங்ஸ்ட்ரோம் நிறுவனத்தின் இந்தியாவுக்கான நிர்வாக இயக்குநர் பங்கஜ் சோப்ரா கூறினார்
 3. மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளில் அரசு வங்கிகள் ஏறக்குறைய ரூ.2 லட்சத்து 30 ஆயிரத்து 284 கோடி அளவிலான கடனை தள்ளுப்படி செய்துள்ளது
விளையாட்டு செய்திகள்
 1. மலேசியாவில் நடைபெறும் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி அயர்லாந்தைத் தோற்கடித்து ஐந்தாமிடத்தைப் பிடித்தது.
 2. உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் மகளிருக்கான 50 மீட்டர் ஏர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவில் இந்தியாவின் அஞ்சும் மவுத்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
 3. உலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியா 8 பதக்கங்களை வென்றுள்ளது
 4. தென் கொரியாவுக்கு எதிரான ஹாக்கி போட்டியில் 4வது தொடரில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது
நியமனங்கள்
 1. உலகில் வன்முறை அதிகம் நடைபெறும் நாடுகளின் பட்டியலில் மெக்சிகோ முதலிடத்தில் உள்ளது
 2. கனடாவில் பிரெண்டா லக்கி என்ற பெண் நிரந்தர ஆர்சிஎம்பி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்
 3. சிவில் விமானப் போக்குவரத்து துறை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.No comments:

Post a Comment