Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 13th March 2018

உலக செய்திகள்
 1. உலகில் ஐந்தாவது மிகப்பெரிய வைரம் சுமார் 260 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு சுரங்கத்தில் வைரக்கல்லை ஜெம் டைமண்ட்ஸ் என்ற நிறுவனம் கண்டெடுத்தது.
 2. டிஜிட்டல் முறையில் 200 இதழ்களை வாடிக்கையாளர்கள் பெறுவதற்கு வகை செய்யும் ஒப்பந்தத்தில் ஆப்பிள் கையெழுத்திட்டது.
 3. பெண்கள் வாழ்வதற்க்கான மிக சிறந்த நாடுகளின் பட்டியலில் டென்மார்க் முதலிடத்திலும் ஸ்வீடன் இரண்டாம் இடத்திலும் நார்வே மூன்றாம் இடத்திலும் உள்ளன
 4. ஜப்பானில் விவசாய நிலங்களை பாதுகாக்க 65cm நீளமும் 50cm அகலமும் கொண்ட ஒரு ஓநாய் ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ளது
தேசிய செய்திகள்
 1. நாட்டிலேயே பணக்கார எம்.பி.யாக கருதப்படும் ஜெயாபச்சன் தனது சொத்து மதிப்பு ஆயிரம்கோடி ரூபாய் என அறிவித்துள்ளார்.
 2. டெல்லியில் நடைபெறும் காசநோய் ஒழிப்பு கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி, சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா ஆகியோர் பங்கேற்றனர். இந்தியாவில் 2025ம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிப்பதற்கான புதிய செயல் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
 3. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆலோசகரான வி.கே.ஜெயின் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
 4. பழுதடையும் வாய்ப்புடையவை என்று கருதப்படும் என்ஜின்களைக் கொண்ட A320Neo ரக விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், இண்டிகோ மற்றும் கோ(Go) ஏர் நிறுவனங்களின் 65 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
 5. ஆதார் எண்ணை வங்கிக் கணக்கு, செல்போன் சேவை உள்ளிட்டவற்றுடன் இணைப்பதற்கான காலக்கெடுவை, காலவரையின்றி நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 6. நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் வைஃபை வசதி ஏற்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது.
 7. பாரத ஸ்டேட் வங்கியான எஸ்பிஐ, குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்காவிட்டால் விதிக்கப்படும் அபராதத்தை 75 சதவீதம் வரை குறைத்துள்ளது.
 8. சுவீடனை சேர்ந்த ஆய்வு நிறுவனமான Stockholm International Peace Research Institute வெளியிட்டுள்ள விவரங்களின்படி, 2013 முதல் 2017ஆம் ஆண்டு காலகட்டத்தில் உலக அளவில் ஒட்டுமொத்தமாக நடைபெற்ற ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது
 9. மொரிசியஸ் அரசு இராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்ய உதவும் வகையில் 10 கோடி டாலரை இந்தியாவுக்கு கடனாக வழங்கவுள்ளது
 10. புதிய வர்த்தக தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் 109 நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்கப்படவுள்ளது
வர்த்தக செய்திகள் 
 1. சீட்டு நிறுவனங்களை முறைப்படுத்துவதற்கான சிட் பண்ட் திருத்த மசோதா- 2018 மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 2. நாட்டின் மிகப்பெரிய வர்த்தக குழுமமான டாடா சன்ஸ் லிமிடெட், தனது மென்பொருள் நிறுவனமான, TCS-ன் 8 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்புடைய பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
விளையாட்டு செய்திகள்
 1. ஐசிசி டெஸ்ட் பவுலர்கள் தரவரிசையில் 900 புள்ளிகளைக் கடந்த தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ரபாடா முதலிடம் பிடித்தார். இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 இடங்கள் முன்னேறி 4-ம் இடத்தில் இருக்கிறார்.
 2. ஐ.பி.எல். 2018 போட்டிக்கான அதிகாரப்பூர்வ பாடல் வெளியாகியுள்ளது.
 3. மெக்சிகோவின் குவாடலஜரா நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் 9 பதக்கங்களுடன் இந்தியா முதலிடம்
 4. இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி 2-வது சுற்றில் உலகின் 12-ம் நிலை வீரரான பிரான்சின் லூகாஸ் பவுலியை வீழ்த்தினார்.
 5. முத்தரப்பு டி20 தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை இந்தியா வீழ்த்தி தொடரில் 2வது வெற்றியை ஈட்டியது.
 6. உலக மல்யுத்த தர வரிசை பட்டியலில் நவ்ஜோத் கவுர் 2வது இடத்தில் உள்ளார் பின்லாந்து விரங்கமாய் பெப்ரா ஒலி முதலிடத்தில் உள்ளார்
 7. 80 வது சீனியர் தேசிய டேபிள் டென்னிஸ் சம்பையன்ஷிப் போட்டி 12 ஆண்டுகளுக்கு பிறகு ஒடிசாவில் நடைபெறவுள்ளது
 8. ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 5 ஆண்டுகளுக்கான நடுவர்களுக்கான விளம்பரதாரராக பேடிஎம் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
 1. சீனாவால் கைவிடப்பட்ட விண்வெளி ஆய்வுநிலையமான டியாங்காங்-1, ஏப்ரல் முதல்வாரத்தில் பூமியை நோக்கி விழும் என புதிய கணிப்புகள் தெரிவிக்கின்றன.
 2. ஒருநாளைக்கு 4 மணிநேரத்திற்கும் அதிகமாக தொலைக்காட்சி பார்க்கும் ஆண்களுக்கு குடல் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்புண்டு என பிரான்ஸில் உள்ள சர்வதேச புற்றுநோய் அமைப்பு தெரிவித்துள்ளதுNo comments:

Post a Comment