உலக செய்திகள்
- சூரியப் புயல் இன்று பூமியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், செயற்கைக் கோள் செயல்பாடு, செல்போன் சிக்னல்கள், மின்சாரம் ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நாசா எச்சரித்துள்ளது.
- பூமியின் குறுங்கோளைக் கண்டுபிடிக்க நாசா அனுப்பிய ஓஸிரிஸ் ரெக்ஸ் என்ற விண்கலம், பென்னு என்ற குறுங்கோளின் படங்களை அனுப்பியுள்ளது.
- நோபல் பரிசுபெற்ற இந்தியா வின் புகழ்பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் கையெழுத்திட்ட புத்தகம் பாஸ்டன் நகரில் சுமார் ரூ.46 ஆயிரத்துக்கு ஏலம் போனது.
- தரமான நிர்வாகம் அளிக்கும் 23 நகரங்கள் பட்டியலில் சென்னை மாநகரம் 19-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.புனே முதலிடத்தில் உள்ளது
தேசிய செய்திகள்
- நாட்டிலேயே பணக்கார எம்.பி.யாக ஐக்கிய ஜனதாதள எம்.பி.யான மகேந்திர பிரசாத் தனது சொத்து மதிப்பு 4 ஆயிரம் கோடி ரூபாய் என அறிவித்துள்ளார்.
- கறவை மாடுகளுக்கு ஆதார் அட்டை வழங்கும் திட்டத்திற்கு 148 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
- கர்நாடகாவில் போக்குவரத்து துறை சார்பில் இயக்கப்படும் பேருந்தில் பயணம் செய்பவர்கள் இனி சீட் பெல்ட் அணிந்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது
- டெல்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு மற்றும் தெற்கு கேம்பஸ்களை இணைக்கும் பிங்க் மெட்ரோ வழித்தடம் இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது.
வர்த்தக செய்திகள்
- இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2018-2019நிதியாண்டில் ஏழு புள்ளி மூன்று விழுக்காடாகவும், 2019-2020நிதியாண்டில் ஏழரை விழுக்காடாகவும் இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது.
- ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சேமிப்பு கணக்குகளில் குறைந்த அளவு இருப்புத் தொகையை பராமரிக்காத2 லட்சம் வாங்கிக்கணக்குகளை ரத்து செய்துள்ளது
- 2016-2017 ஆம் நிதியாண்டில் பிஎஸ்என்எல் ஏர் இந்தியா மற்றும் எம்டிஎன்எல் ஆகிய நிறுவனங்கள் மிக மோசமான நஷ்டத்தை பெற்ற பொதுத் துறை நிறுவனங்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது
- வேளாண் பொருட்கள் ஏற்றுமதியை ஊக்குவிக்க பிரத்யேக சரக்கு விமான சேவை கொள்கை உருவாக்கப்படும் என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்
விளையாட்டு செய்திகள்
- இந்தியா கிரிக்கெட் அணி வீரர் சுரேஷ் ரெய்னா டி 20 போட்டியில் 1452 ரன் குவித்து முன்னாள் கேப்டன் டோனியின் சதனையை முறியடித்துள்ளார்
- ஆஸ்திரிலியாவின் கோல்டு கோஸ்டில் 21வது கமான் வெல்த் விளையாட்டு போட்டி நடைபெறவுள்ளது. இதில் கேப்டன் ஆக மன்ப்ரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்
நியமனங்கள்
- அமெரிக்காவின் உளவு துறை அமைப்பான சி.ஐ.ஏ வின் இயக்குனராக முதல் முறையாக கினா ஹாஸ்பெக் என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார்
- நேபாள அதிபராக வித்யா தேவி பண்டாரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
- அமெரிக்க உள்துறை அமைச்சராக மைக் பாம்பியோ நியமிக்கப்பட்டுள்ளார்
இரங்கல்
- உலக புகழ்பெற்ற இயற்பியலாளரும், வானியல் அறிஞருமான ஸ்டீபன் ஹாக்கிங், இங்கிலாந்தில் உடல் நலக்குறைவால் காலமானார்.
No comments:
Post a Comment