Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 3rd March 2018

உலக செய்திகள்
 1. எச்1 பி விசா மூலம் அமெரிக்காவில் பணியாற்றும் தொழில் நுட்ப பணியாளர்கள், தங்கள் கணவன் அல்லது மனைவிக்கும் வேலை வாய்ப்பு தருமாறு கோரலாம் என அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
 2. எந்த ஏவுகணை தடுப்பு அமைப்பாலும் கட்டுப்படுத்த முடியாத அணுஆயுத ஏவுகணை, வரம்பற்ற தொலைவு செல்லும் ஏவுகணை என, நவீன ஆயுதங்களை ரஷ்யா அறிமுகப்படுத்தியது.
 3. 2018ஆம் ஆண்டிற்கான பில்லியனர்கள் பட்டியலில் சர்வதேச அளவில் நார்வேயை சேர்ந்த இளம் கோடீஸ்வரரான அலெஸ்சண்டெர் அண்ட்ராஸன் முதலிடத்தை பெற்றார்
 4. புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட ஹிஸ்டன் பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியரான இந்திய அமெரிக்கர் நவீன்க்கு ரூ.7 கோடியே 75 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது 
தேசிய செய்திகள்
 1. கிழக்குக் கடற்கரை ரயில்வே முதன்முறையாகச் சக்கர நாற்காலியில் வரும் மாற்றுத் திறனாளிகள் எளிதாக ரயிலுக்குள் ஏறும் வகையில் மடிக்கத் தக்க சாய்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
 2. கர்நாடகத்தில் 650கோடி ரூபாய் மதிப்பீட்டில் சமூகச் சீர்திருத்தவாதியான பசவேஸ்வரருக்கு நினைவகம் கட்ட அந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
 3. இந்தியா - வியட்நாம் இடையே அணு ஆயுதம், விவசாயம், பொருளாதார - வர்த்தக ஒத்துழைப்பு தொடர்பான 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
 4. உலகிலேயே மிக உயரமான சத்ரபதி சிவாஜி சிலை செய்யும் பணிக்கான ஒப்பந்தத்தை லார்சன் அண்ட் ட்யூப்ரோ நிறுவனம் பெற்றுள்ளது.
 5. மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல வாரியம் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான திட்டங்களுக்கு நிர்பயா நிதியம் மூலம் ரூ. 2,900 கோடி மதிப்பிலான நிதியுதவியை அளித்துள்ளது.
 6. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 24 மணி நேர கல்வி வழிகாட்டி உதவி மையம் டிபிஐ வளாகத்தில் தொடங்கி வைத்தார்.
வர்த்தக செய்திகள்
 1. உருக்கு மற்றும் அலுமினியம் மீது இறக்குமதி வரி 10, 25 % உயர்த்தியுள்ளது, இந்த வரி விதிப்பு அமெரிக்க பொருளாதாரத்தை மட்டுமின்றி, அதைச் சார்ந்த நாடுகளையும் பாதிக்கும் என சர்வதேச செலாவணி நிதியம்(IMF) எச்சரிக்கை விடுத்துள்ளது.
 2. ரூ.333 கோடியில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 3ஜி மொபைல் சேவையை விரிவுபடுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன.
 3. மத்திய அரசு பொதுத் துறை வங்கிகளின் செலவுகளை குறைத்தல் மற்றும் சேவையை மெருகேற்ற 35 வெளிநாட்டு செயல்பாடுகளை மூட இருப்பதாக தெரிவித்துள்ளது.
 4. ஓஎன்ஜிசி நிறுவனம் 45 சதவீத ஈவுத்தொகையை வழங்குவதாக தெரிவித்துள்ளது.
 5. ஆப்பிள் நிறுவனம் ஸ்மார்ட் வாட்ச் பிரிவில் போட்டியின்றி முதல் இடத்தில் உள்ளது.
 6. மைக்ரோசாப்ட் நிறுவனரான பில்கேட்ஸ் உலகின் நம்பர் ஒன் பணக்காரர்கள் பட்டியலில் 3 வது இடத்தில் உள்ளார்.
 7. எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்தை நிப்பான் ஸ்டீல் அண்ட் சுமிட்டோமா மெட்டல் கார்ப்பரேஷனுடன் இணைந்து வாங்க போவதாக ஆர்சிலர்மிட்டல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 8. ப்ளிப்கார்ட் தனது கிளை நிறுவனமான மின்திரா மற்றும் ஜபாங் நிறுவனங்களில் 1,100கோடி முதலீடு செய்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
 1. காஷ்மீரில் பனிச்சறுக்குப் போட்டிகள் தொடங்கியுள்ளன. சுற்றுலாத்துறையையும், குளிர்கால விளையாட்டுப் போட்டிகளையும் ஊக்குவிக்கும் விதமாக பனிச்சறுக்குப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
 2. கிர்கிஸ்தானில் ((கிர்கிஸ்தான்)) உள்ள பிஷ்கெக் ((Bishkek)) நகரில் நடைபெற்று வரும் சீனியர் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை நவ்ஜோத் கவுர் தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.
 3. சர்வதேச ஜிம்னாஸ்டிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்த புத்தா அருணா ரெட்டிக்கு 2 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் அறிவித்துள்ளார்.
 4. இந்தியாவின் பாரா நீச்சல் வீரர் பிரசாந்த் கரமாகருக்கு இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டி 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 5. .இந்தியாவின் பயஸ் ஜோடி துபாய் ஓபன் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
 1. ரஷ்யாவின் ஹைப்பர்சானிக் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக சோதனை செய்தது.
 2. செல்போன்களை திறந்தால் வெறும் மொபைல் செயலிகளே குவிந்திருக்கும் நிலையில், அதற்கு சற்றும் பயன்படாத ஒரு வித்தியாசமான செல்போன் மக்களை கவர்ந்து வருகிறது. அமெரிக்காவை சேர்ந்த ஹாலியர் ((Hollier )) மற்றம் டாங் ((tang)) ஆகிய இருவரும் சேர்ந்து, லைட் என்ற செல்போனை கடந்த 2015ல் வடிவமைத்தனர்.
நியமனங்கள்
 1. IPL தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஆக தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்

No comments:

Post a Comment