Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 5th March 2018

உலக செய்திகள்
 1. அமெரிக்காவில் அமேசான் நிறுவன அலுவலகம் பசுமைக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்டப்பட்டுள்ள கோள வடிவிலான கட்டிட அமைப்பு.
 2. அமெரிக்க விமானந் தாங்கிக் கப்பலான USS கார்ல் வின்சன் (USS Carl Vinson) வியட்நாமுக்கு வந்துள்ளது.
 3. சீனாவில் ராணுவத்துக்கான நிதி ரூ.11 லட்சம் கோடியாக அதிகரிப்பு. இது இந்திய ராணுவத்துக்கு ஒதுக்கப்படுவதைக் காட்டிலும் 3 மடங்கு அதிகம் ஆகும்.
 4. மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் கோலம்பூரில் வெற்றியின் விருதுகள் நூல் வெளியிடபட்டது
தேசிய செய்திகள்
 1. சர்வதேச யோகா விழா புனித நகரான ரிஷிகேஷில் நடைபெற்றது
 2. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஹெலி-டேக்ஸி எனும் ஹெலிகாப்டர் சேவை தொடங்கவுள்ளது.
 3. பொது துறை வங்கியின் வாராக்கடன் 516கோடி ஆக உள்ளது
 4. பிரணாப் முகர்ஜீக்கு மேற்கு வங்கத்தில் உள்ள கல்வி நிறுவனமான IIEST கௌரவ பட்டம் வழங்கி சிறப்பித்தது
வர்த்தக செய்திகள்
 1. பிப்ரவரி மாதத்திற்கான அந்நிய முதலீடு ரூ. 11,000 கோடி என தேசிய பங்கு சந்தை தெரிவித்துள்ளது
 2. 80% ஆதார் எண்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளதாக UDAI இயக்குனர் அஜய் பூஷன் பாண்டே தெரிவித்துள்ளார்
விளையாட்டு செய்திகள்
 1. சவூதி அரேபியாவில் முதன் முறையாக பெண்கள் பங்கேற்ற மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. சவூதி அரேபியாவில் பெண்கள் வாகனங்கள் ஓட்டுவதற்கு அண்மையில்தான் அனுமதி கிடைத்தது.
 2. ஐபில் கிரிக்கெட்டில் பஞ்சாப் அணியின் கேப்டனாக தமிழகத்தின் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 3. மெக்சிகன் ஓபன் டென்னிஸ் போட்டியில் அர்ஜென்டினாவின் ஜீவான் மார்டின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றார்.
 4. இந்திய வீரர் ஷாஸார் ரிஸ்வி உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம். வென்றார்.
 5. இந்திய வீராங்கனை அருணா ரெட்டி உலக கோப்பை ஜிம்னாஸ்டிக் போட்டியில் வெண்கலம் வென்றுள்ளார்.
 6. மெக்சிகன் ஓபன் டென்னிஸ் போட்டியில் லெசியா சுரென்கா மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன்ஷிப் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
90வது ஆஸ்கர் விருதுகள்(ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற்றது)
 1. Three Billboards படத்தில் நடித்த நடிகர் சாம் ராக்வெல் சிறந்த துணை நடிகராக விருது பெற்றார்.
 2. சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை சிலி நாட்டின் ஃபென்டாஸ்டிக் உமன் வென்றது.
 3. சிறந்த துணை நடிகையாக I Tonya படத்திற்காக ஆலிசன் ஜேனி பெற்றார்.
 4. சிறந்த ஒப்பனைக்கான விருது The Darkest Hour படத்தில் கதாநாயகன் Gary Oldmanக்கு வின்ஸ்டன் சர்ச்சிலாக மேக்அப் போட்ட மூன்று மேக்கப் கலைஞர்களுக்கு அளிக்கப்பட்டது.
 5. சிறந்த ஆவணப்படத்திற்கான விருதை இகாரஸ் என்ற திரைப்படம் வென்றது.
 6. Phantom Thread படத்தின் சிறந்த ஆடை வடிவமைப்புக்காக மார்க் பிரிட்ஜசுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது.
 7. சிறந்த சவுண்ட் எடிட்டிங் விருதை Dunkirk படத்திற்காக ரிச்சர்ட் கிங், அலெக்ஸ் கிப்சன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
 8. அனிமேஷன் குறும் படத்திற்கான விருதை டியர் பாஸ்கெட் பால் படம் தட்டிச் சென்றது.
 9. அனிமேஷன் முழு நீளப் படத்திற்கான விருதை கோகோ படம் வென்றது.
 10. சிறந்த திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது, கில்லெர்மோ டெல் டோரோ இயக்கிய "தி ஷேப் ஆஃப் வாட்டர்" திரைப்படத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
 1. விண்வெளிக்கு அனுப்பப்பட்ட டெஸ்லா ரோட்ஸ்டெர் கார் பூமியிலிருந்து கிருமிகளை எடுத்துச் சென்று அங்கு உயிரி அச்சுறுத்தல் ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
 2. வானொலிகளின் பயன்பாட்டில் இந்திய உலகிலேயே 3வது இடத்தை பெற்றுள்ளது
முக்கிய தினங்கள்
 1. மார்ச் 05 - சொற்களின் உச்சரிப்பு தினம்

No comments:

Post a Comment