உலக செய்திகள்
- இணைய சமத்துவத்திற்கான சட்டத்தை இயற்றிய அமெரிக்காவின் முதல் மாகாணம் என்ற பெருமையை வாஷிங்டன் பெற்றுள்ளது. வாஷிங்டன் மாகாண அளவில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்தச் சட்டத்தில் ஆளுநர் ஜெய்ன்ஸ்லீ (Jay Inslee) கையெழுத்திட்டுள்ளார்.
- சீனாவில் இந்த ஆண்டு ராணுவத்துக்கான நிதி 11 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
- உலகின் 4-வது வலிமையான ராணுவத்தை உடைய நாடாக, இந்தியா உருவெடுத்துள்ளது. உலக அளவில் 133 நாடுகளின் ராணுவ வலிமை குறித்த குளோபல் ஃபயர் பவர் இண்டக்ஸ் 2017 என்ற பட்டியல் வெளியிடட்ப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முதலிடத்தில், அமெரிக்காவும், 2-வது இடத்தில், ரஷ்யாவும், 3-வது இடத்தில் சீனாவும் உள்ளன.
இந்திய செய்திகள்
- புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூடத்தில் பெண்ணியம் தலைப்பில் ஓவிய, சிற்ப கண்காட்சி நடைபெற்றது
- இந்தியாவில் குழந்தை திருமணம் பாதியாக குறைந்து விட்டதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கடந்த பத்தாண்டுகளில் இரண்டரை கோடி குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக யுனிசெஃப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஏர் இந்தியா விமானங்கள் சவூதி அரேபியா வான்பரப்பு வழியாக இஸ்ரேலுக்குச் செல்ல ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
- இந்தியாவுக்குக் கச்சா எண்ணெய் வழங்குவதில் சவூதிஅரேபியாவை முந்தி ஈராக் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
- சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக, கடந்த ஞாயிறன்று ஏர் இந்தியா ஏர்பஸ் 319 ரக விமானத்தை முழுக்க முழுக்க பெண் ஊழியர்களைக் கொண்டு இயக்கியுள்ளது
விளையாட்டு செய்திகள்
- ஐதராபாத்தில் கால்பந்து ரசிகர்களுக்கு குதூகலம் ஊட்டும் விதமாக சோப் ஃபுட்பால் விளையாட்டு இளைஞர்களிடையே சிறப்பாக வரவேற்பைப் பெற்றுள்ளது.
- அமெரிக்காவில் ஆப்பிரிக்க நாடுகளின் கல்வி நிதிக்காக நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் அணி வெற்றிபெற்றது.
வர்த்தக செய்திகள்
- எட்டாவது தலைமுறை ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் கார் டெல்லி, மும்பை, அகமதாபாத் உள்ளிட்ட வட இந்திய நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- ஷியோமி எம்.ஐ. 4 தொலைக்காட்சி விற்பனை பிலிப்கார்ட்டில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு தொடங்குகிறது.
- இந்தியாவுக்குக் கச்சா எண்ணெய் வழங்குவதில் சவூதிஅரேபியாவை முந்தி ஈராக் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
- கடந்த 2016-17 ஆம் நிதி ஆண்டில் அரசு வங்கிகள் ரூ.81ஆயிரத்து683 கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளன என்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று தெரிவித்தார்.
- உலக அளவிலான வளர்ச்சி, உள்நாட்டு தேவைகள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் 2019-ம் நிதியாண்டில் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி5 சதவீதமாக இருக்கும்
நியமனங்கள்
- மேகாலயாவின் முதலமைச்சராக கான்ராட் சங்மா பதவியேற்றார். தேசிய மக்கள் கட்சி, பா.ஜ.க., ஐக்கிய ஜனநாயகக் கட்சி இணைந்து அங்கு ஆட்சி அமைக்கின்றன.
No comments:
Post a Comment