Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Coaching

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 12th April 2018

உலக செய்திகள்
  1. பூமியின் ஒரு நகரிலிருந்து மற்றோர் நகருக்கு ராக்கெட்டில் பயணிக்கும் திட்டம் சில ஆண்டுகளில் சாத்தியமாக வாய்ப்புள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
  2. உலகின் முதல் தானியங்கி கப்பலை நார்வேயை சேர்ந்த யாரா என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.இந்த கப்பலுக்கு யாரா பெர்க்லேன்ட் என பெயரிடப்பட்டுள்ளது
  3. சமூக வலைத்தளமான கூகிளின் ஆர்குட் முகநூலுக்கு போட்டியாக ஹலோ என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது
  4. இந்தியா-ஜாம்பியா இடையே இரட்டைவரி விதிப்பு தடுப்பு, நீதித்துறை ஒத்துழைப்பு உள்ளிட்ட 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையேழுத்தாகியுள்ளன
தேசிய செய்திகள்
  1. இந்தி நடிகர், இசையமைப்பாளர் மற்றும் பாடகரான குந்தன்லால் சைகலின் 114வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரை கவுரவிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டது.
  2. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளத்தில் கட்டமைக்கப்பட்ட ஐ.சி.ஜி.எஸ்.விக்ரம் என்ற அதிநவீன புதிய ரோந்து கப்பல் இந்திய கடலோரக் காவல் படையில் இணைக்கப்பட்டுள்ளது
  3. 16வது எரிசக்தி கூட்டமைப்பின் அமைச்சர்கள் மாநாடு டெல்லியில் நடைபெற்றது
  4. தமிழகத்தில் அம்மா உணவகம் போன்று கேரளாவில் பீப்புள்ஸ் ரெஸ்டாரன்டை(People Restaurant) ஆலப்புழை அம்மாநில அரசு அமைத்துள்ளது
வர்த்தக செய்திகள்
  1. உலக அளவில் சமையல் எரிவாயு சிலிண்டர் இறக்குமதியில் இந்தியா 2வது இடம் பிடித்துள்ளது.சீனா முதலிடத்தில் உள்ளது
  2. இந்தியாவின் பொருளாதாரம் 2018-2019 நிதியாண்டில்3%வும் 2019-2020 நிதியாண்டில் 7.6%வும் வளர்ச்சி அடையும் என ஆசிய மேம்பாட்டு வங்கி(ஏடிபி) தெரிவித்துள்ளது
  3. உபெர் நிறுவனம் தனது ஓட்டுநர்களுக்காக Earnings Traker வசதியுடன் புதிய மொபைல் ஆப் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது
  4. இந்திய மோட்டர் வாகன சந்தையின் வாகன விற்பனையில் டாப் 10 கார்கள் பட்டியலில் மாருதி சுசூகி ஆல்டோ முதலிடத்தில் உள்ளது
விளையாட்டு செய்திகள்
  1. ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான மல்யுத்தப் போட்டியில் 74கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சுசில்குமார் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ் போத்தாவை வீழ்த்தித் தங்கப் பதக்கம் வென்றார்.
  2. ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஆடவர் 57கிலோ எடைப்பிரிவில் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ராகுல் அவாரே கனடாவின் ஸ்டீவன் தக்காகாசியை வீழ்த்தித் தங்கப் பதக்கம் வென்றார்.
  3. ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மகளிர் 76கிலோ எடைப்பிரிவில் மூன்றாமிடத்துக்கான போட்டியில் இந்தியாவின் கிரண், மொரிசியஸ் வீராங்கனை கடூஸ்காவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார்.
  4. ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கான 53கிலோ எடைப்பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பபித குமாரி கனடாவின் டயானா வெய்க்கரிடம் தோற்று வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
  5. ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கி சுடும் போட்டியில் மகளிர் 50மீட்டர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் தேஜஸ்வின் சாவந்த் வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
  6. ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில்74 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சுஷில் குமார் தங்கப்பதக்கம் வென்றார்
  7. ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் ராகுல் தங்கம் வென்றார்
  8. தமிழகத்தில் நடைபெற இருந்த 6 ஐபிஎல் போட்டிகளும் காவேரி போராட்டம் காரணமாக புனேக்கு மாற்றப்பட்டுள்ளது
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. போக்குவரத்து மற்றும் வழிகாட்டுதலுக்கு உதவும் செயற்கைக்கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1 உடன், பி.எஸ்.எல்.வி.சி.41 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
முக்கிய செய்திகள்

  1. ஏப்ரல் 12- உலக விமான போக்குவரத்து மற்றும் விண்வெளி தினம்
Post a Comment