Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 13th April 2018

உலக செய்திகள்
 1. உடலுழைப்பின்றி நெடுநேரம் அமர்ந்திருப்பது மூளையைச் சோர்வடையச் செய்து நினைவாற்றல் குறைவதற்கு வழிவகுக்கும் என அமெரிக்காவின் கலிபோர்னிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 2. ஒன் பெல்ட் ஒன் ரோடு திட்டத்தில் ரூ.8.2லட்சம் கோடி முதலீடு செய்ய சீனா முடிவு செய்துள்ளது
 3. உலகில் மிகவும் மதிக்கப்படும் நபர்களின் பட்டியலில் ஆண்கள் பிரிவில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் முதலிடத்தில் உள்ளார். பெண்கள் பிரிவில் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி முதல் இடத்தில் உள்ளார்.
 4. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான நவாஸ்செரீப்க்கு அரசு பதவிகளை வகிக்க வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 5. ஐரோப்பாவில் 7 தீவுகளை கொண்ட நாடாக மால்டா அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் தலைநகர் வல்லெட்டா .
 6. ஆஜர்பைஜானின் புதிய அதிபராக நான்காவது முறையாக இல்ஹெ அலியாவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தேசிய செய்திகள்
 1. திருவிடந்தையில் நடைபெறும் கண்காட்சியில் இந்திய-ரஷ்ய நிறுவனங்களிடையே இடையே ராணுவ தளவாட உற்பத்திக்கான பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
 2. செல்பேசி மூலம் முன்பதிவில்லாப் பயணச்சீட்டுக்களைப் பெறும் UTS ONMOBILE என்கிற செயலி தெற்கு ரயில்வேயின் அனைத்து நிலையங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
 3. இந்திய பிரதமர் மோடி மற்றும் அமிதாப்பச்சன் ஆகியோர் உலகின் மிகவும் மதிக்கப்படும் நபர்களின் பட்டியலில் 8 மற்றும் 9 வது இடத்தில் உள்ளனர்.
 4. இஸ்ரோ தலைவர் கே. சிவன் அடுத்த எட்டு மாதங்களில் சந்திராயன்-2 உள்ளிட்ட 9 செயற்கை ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வர்த்தக செய்திகள்.
 1. வங்கிகள் வாரியக் குழுவின் புதிய தலைவராக முன்னாள் மத்திய பணியாளர் நலத்துறை செயலாளர் பானு பிரதாப் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்
 2. சர்வதேச மருத்துவ காப்பீட்டு திட்டத்தை பொதுத்துறை காப்பீடு நிறுவனமான நீயூ இந்தியா அல்யூரன்ஸ் அறிமுகப்படுத்தி உள்ளது.
 3. 2018ஆம் ஆண்டுக்கான உலக பணக்காரர்கள் பட்டியலில் அமென்சியோ ஓர்டிகா 73 பில்லியன் டாலர் சொத்துகளுடன் முதல் இடத்தில் உள்ளார்
விளையாட்டு செய்திகள்
 1. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் மல்யுத்த போட்டியில் 65 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் புனியா தங்கம் வென்றார்.
 2. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுதல் 25 மீட்டர் ராபிட் பையர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் அனிஷ் தங்கம் வென்றார்.
 3. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் மல்யுத்த போட்டியில் 97 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் மவுஸம் காத்ரி வெள்ளி பதக்கம் வென்றார்.
 4. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் விதிகளை மீறியதாக இந்தியாவின் தடகள வீரர்கள் இருவர் ராகேஷ் பாபு மற்றும் இர்பான் கோலாதும் வெளியேற்றபட்டனர்.
 5. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோணி 2011 உலக கோப்பை போட்டியில் பயன்படுத்திய கிரிக்கெட் பேட் ஏலம் விடப்பட்டது இது ரூ 91.4 லட்சத்திற்கு ஆர்.கே.குளோபல் ஷேர்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இது உலகின் அதிக விலைக்கு போன கிரிக்கெட் பேட் என கின்னசில் இடம்பிடித்துள்ளது.
65வது தேசிய திரைப்பட விருதுகள்
 1. சேகர் கபூர் தலைமையில் உருவாக்கப்பட்ட குழு தேசிய திரைப்பட விருதுகளை அறிவித்தது
 2. காற்று வெளியிடை மற்றும் மாம் என்ற திரைப்படங்களுக்காக சிறந்த இசையமைப்பாளர் மற்றும் சிறந்த பின்னணி இசையமப்பாளர் விருது இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானுக்கு வழங்கப்பட்டுள்ளது.
 3. மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு மாம் திரைப்படத்திற்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.
 4. கேரள நடிகர் பகத் பாசிலுக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது தொண்டிமுத்தும் திரிக்சாக்கியமும் படத்திற்காக வழங்கப்பட்டது .
 5. பாலிவுட்நடிகை வினோத் கன்னாவுக்கு திரைப்பட துறையின் உயரிய விருதான "தாதா சாகிப் பால்கே " விருது வழங்கப்பட்டது.
 6. பாகுபலி-2 படத்திற்கு மக்கள் அபிமானம் பெற்ற படத்திற்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
 7. சிறந்த தமிழ் படத்திற்கான விருது "டூ லெட்" படத்திற்கு வழங்கப்பட்டது.
 8. டேக் ஆஃப் மலையாள படத்தில் நடித்த நடிகை பார்வதிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
 9. ராஜமௌலி சிறந்த ஆகபஷன் டைரக்டர்க்கான விருது தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 10. சிறந்த பாடகிக்கான தேசிய விருது சாஷா திருப்பதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
 11. சிறந்த பாடகருக்கான விருது மலையாள படத்திற்காக ஜேசுதாசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
 12. யூனியன் அல்யூரன்ஸ் 2017க்கான தேசிய விருது வழங்கும் விழாவை இந்தோனேசியாவில் நடத்தியது.
முக்கிய தினங்கள்

 1. ஏப்ரல் 13- ஜாலியன் வாலாபாக் படுகொலைத் தினம்

No comments: