Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 14th April 2018

உலக செய்திகள்.
  1. உலகம் முழுவதும் தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிக்கவும் அதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் உலக சுகாதார அமைப்பான யுனிசெப் 10 முக்கிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
  2. மியான்மர் நாட்டில் ஏப்ரல் 17ல் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அங்கு தண்ணீர் திருவிழாவில் ஒருவர் மீது ஒருவர் தண்ணீரை பீய்ச்சி அடித்து கொண்டாடினார்கள்.
  3. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் அரசு முறை பயணமாக சீனா செல்கிறார்.
தேசிய செய்திகள்.
  1. இந்திய பிரதமர் நரேந்திரோ மோடி பீஜப்பூருக்கு சென்று அங்கு ஆயூஷ்மான் பாரத்-தேசிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். இதன் மூலம் 10 கோடி குடும்பங்களுக்கு ஓராண்டுக்கு தலா ஐந்து லட்சம் இலவசமாக மருத்துவ காப்பீடு அளிக்கப்படும்.
  2. அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி பீஜப்பூரில் உள்ள பழங்குடி மக்களுக்கு ஒரு ஜோடி காலனிகளை வழங்கினார் பின்னர் ஏழு மாவட்டங்களுக்கு சைபர் ஆப்டிக்ஸ் கேபிள் உதவியுடன் முதற்கட்ட இணைய சேவையையும் தொடங்கி வைத்தார்.
  3. புதுச்சேரியின் கவர்னர் அலுவலகத்தின் ராஜநிவாஸில் மக்களின் குறைகளை கேட்க மின்னணு முறையில்py.gov.in என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
  4. இந்தியாவிலேயே ராணுவ தடவாள பொருட்களை உற்பத்தி செய்ய இந்தியா மற்றும் ரஷ்யா இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து போடப்பட்டு உள்ளது.
  5. உலகிலேயே குறைந்த எடை கொண்ட பீரங்கிகளை வாங்க 542 பில்லியன் டாலர் மதிப்பில் பிரிட்டீஷை சேர்த்த பிஏஇ சிஸ்டம்ஸ் என்ற நிறுவனத்திடம் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.
வர்த்தக செய்திகள்
  1. தமிழக நுகர்வோரின் TN-LMCTS என்ற செயலி மூலம் பெட்ரோல் பொருட்களை அதிக விலைக்கு விற்றாலே அல்லது அதன் அளவு குறைந்தாலே புகார் அளிக்கலாம் என தொழில்துறை தெரிவித்துள்ளது.
  2. ஜனவரி முதல் மார்ச் வரை முதல் காலாண்டில் இந்திய நிறுவனங்கள் ரூ20 லட்சம் கோடி வரை இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.
  3. ஹெச்டிஎப்சி வங்கி 50,000 கோடி வரை கடன் பத்திர வெளியீட்டின் மூலம் திரட்ட உள்ளது .
  4. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனங்கள் 5 முதல் 17 சதவீதம் வரை கல்விக் கட்டணங்களை உயர்த்தியுள்ளது
விளையாட்டு செய்திகள்
  1. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் ஈட்டி எறிதலில்47 மீ பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.
  2. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் 45 கி எடை பிரிவில் இந்தியாவின் மேரி கோம் தங்கம் வென்றார்.
  3. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் 50 மீ ரைபிள் பிரிவில் இந்தியாவின் சஞ்சீவ் ராஜ்புட் தங்கம் வென்றார்.
  4. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் ஆண்களுக்கான மல்யுத்த போட்டியில் 125 கி எடை பிரிவில் இந்தியாவின் சுமித் மாலிக் தங்கம் வென்றார்.
  5. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் மகளிருக்கான மல்யுத்த போட்டியில் 51 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் வினிஸ் பேகத் தங்கம் வென்றார்.
  6. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் ஆண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் 51 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் கௌரவ் சொலாங்கி தங்கம் வென்றார்.
  7. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் மகளிர் இரட்டையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் மனிகா- மௌமா தங்கம் வென்றனர்.
  8. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் 91 கிலோவுக்கும் அதிக எடைப்பிரிவினருக்கான குத்துச் சண்டைப் போட்டியில் இந்திய வீரர் சதீஷ் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
  9. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் 86 கிலோ எடைப்பிரிவினருக்கான மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் சோம்வீர் வெண்கலப்பதக்கம் வென்றார்.
  10. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் டேபிள் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சரத் அச்சந்தா மற்றும் சத்யன் ஞானசேகரன் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளனர்.
  11. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் 75 கிலோ எடைப்பிரிவினருக்கான குத்துச் சண்டைப் போட்டியில் விகாஷ் கிரிஷன் எனும் இந்திய வீரர் தங்கம் வென்றார்.
  12. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த்தில் மல்யுத்தப் போட்டியில் 62 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் நியூசிலாந்தின் டேலா ஃபோர்டைத் தோற்கடித்து வெண்கலப்பதக்கம் வென்றார்.
  13. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் பேட்மின்டன் மகளிர் இரட்டையர் போட்டியில் அஸ்வினி பொன்னப்பா - என். சிக்கி ரெட்டி இணை ஆஸ்திரேலிய வீரர்களைத் தோற்கடித்து வெண்கலப்பதக்கம் வென்றது.
  14. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் ஸ்க்வேஷ் கலப்பு இரட்டையர் போட்டியில் தீபிகா பல்லிகல் கார்த்திக்-சவுரவ் கோஷல் இணை வெள்ளி பதக்கம் வென்றது
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

  1. ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் பூமியில் வடக்கு தெற்காக காந்த புலம் உள்ளது. மேலும் இந்த காந்த புலத்தினை விட 20000 மடங்கு வலிமை குறைந்த காந்தபுலத்தினை ஈசா ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது.