Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 16th April 2018

உலக செய்திகள்
 1. பசுமை நாடுகளின் பட்டியலில் இந்தியா 177வது இடத்தில் உள்ளது. 180 நாடுகளிக்கிடையே நடத்தப்பட்ட ஆய்வில் சுவிட்சர்லாந்து நாடு முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அதை தொடர்ந்து பிரான்ஸ், டென்மார்க், மால்ட்டா, சுவீடன் ஆகிய நாடுகள் உள்ளன.
 2. பாகிஸ்தானில் முதன்முறையாக திருநங்கைகளுக்கான தொழிற்பயிற்சிப் பள்ளி தி ஜெண்டர் கார்டியன் துவங்கப்பட்டுள்ளது
 3. புவிவெப்பமயமாதல் காரணமாகவே, ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அட்லாண்டிக் பெருங்கடல் நீரோட்டத்தின் வேகம் குறைந்திருப்பதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 4. அயர்லாந்தின் மிக உயரமான ஓகாண்நெல் டவர் 47 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்டுள்ளது
தேசிய செய்திகள்
 1. ஹைதராபாத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன் சாமன்யூ பொத்துராஜு ஆப்ரிக்க மலையில் உள்ள கிளிமாஞ்சாரோ மலை உச்சியில் ஏறி உலகச்சாதனை புரிந்துள்ளான்.
 2. சிந்து சமவெளி நாகரிகம் தொள்ளாயிரம் ஆண்டு வறட்சியாலேயே அழிந்ததாக கோரக்பூர் IIT மாணவர்களின் ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரம் ஆண்டுகள் மழைப் பொழிவு நிலவரம் குறித்து நிலவியல் மற்றும் புவி இயற்பியல் மாணவர்கள் ஆய்வுமேற்கொண்டனர்.
 3. எழுதும் வார்த்தைகளை எண்ணிக் கணக்கிடும் பேனாவை ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த 9 வயதுச் சிறுவனான முசாஃபர் அகமத் கான் கண்டுபிடித்துள்ளான்.
 4. கோடைக்காலத்துக்கு முன்பே 153 மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 5. உலக அளவில் மக்களை கவர்ந்த பிரபலங்கள் பட்டியலில் ப்ரியங்கா சோப்ரா 12வது இடத்தில் உள்ளார்
 6. இந்திய இராணுவ காமெண்டர்களின் மாநாடு டெல்லியில் நடைபெற்றது
 7. ரயில் பயணத்தின் போது குறைகளைத் தெரிவிப்பதற்காக மடாட் (MADAD) எனப்படும் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
வர்த்தக செய்திகள்
 1. கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனம் காரணமாக வங்கிகளின் வாராக்கடன் ரூ.8,000 கோடி அதிகரிப்பு
 2. பொது காப்பீட்டு பிரிமியம் 2017-2018 ஆம் நிதியாண்டில் 17 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளதாக இந்திய காப்பீட்டு ஒழுங்கு முறை மற்றும் மேம்பட்டு ஆணைய புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளது
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
 1. Artificial inteligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம், ஒரு நபரின் முப்பரிமாண உருவத்தை சில நிமிடங்களிலேயே உருவாக்கும் புதிய தொழில்நுட்பத்தை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
 2. சூரியக் குடும்பத்துக்கு வெளியே உள்ள கோள்களை கண்டறிவதற்காக TESS என்ற செயற்கைக் கோளை நாசா விண்ணில் செலுத்தியது.
விளையாட்டு செய்திகள்
 1. ஸ்பெயினில் நடைபெற்ற சூப்பர் பைக் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோனதன் ரியா ((Jonathan Rea)) வெற்றி பெற்றார்.
முக்கிய தினங்கள்

 1. ஏப்ரல் 16- சார்லி சாப்ளிங் 129வது பிறந்தநாள்

No comments:

Post a Comment