Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 17th April 2018

உலக செய்திகள்
 1. தி நியூயார்க் டைம்ஸ் (New York Times) மற்றும் நியூ யார்க்கர் (New Yorker) பத்திரிகைகளுக்கு புலிட்சர் விருது வழங்கப்பட்டுள்ளது.
 2. உலகிலேயே அதிக மின் அழுத்தம் கொண்ட டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கும் திட்டம் சீனாவில் நிறைவேற்றப் பட்டுள்ளது.
 3. லண்டனில் பொது எதிர்காலத்தை நோக்கி என்ற தலைப்பில் காமன் வெல்த் மாநாடு தொடங்கியது
 4. சீனாவில் தயாரிக்கப்பட்ட கண்களுக்குப் புலப்படாத அதிநவீன ஜே-10சி போர் விமானங்களை சீனா தனது விமானப் படையில் இணைத்துள்ளது
 5. ஜோர்டானுக்கான இஸ்ரேல் தூதரக அமீர் வீஸ்பிராட் பதவியேற்றார்
தேசிய செய்திகள்
 1. ராணுவம் மற்றும் பாதுகாப்பு துறையில் இந்தியா - ஸ்வீடன் இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
 2. பாகிஸ்தான் எல்லையை ஒட்டியப் பகுதியில் Gagan Shakti என்ற பெயரில் இந்தியா-ரஷ்யா இணைந்து போர் ஒத்திகை. மேலும் இந்திய விமானப்படை விமானங்கள், 72 மணி நேரத்தில் 5 ஆயிரம் முறை வானில் பறந்து சாதனை படைத்துள்ளன.
 3. டெல்லியையும் மும்பையையும் இணைக்கும் வகையில் ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவில், விரைவுச்சாலை அமைக்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
 4. ராஜஸ்தானில் அரசுப் பணியாளர் தேர்வாணயத் தேர்வுக்கான பாடத்திட்டத்தில் நீதிசாஸ்திரா என்ற பெயரில் பகவத்கீதை பாடம் சேர்ப்பு
 5. தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் தோடர் மக்களின் தையற் வேலைப்பாடான எம்பிராய்டரிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது
 6. ஜம்மு காஷ்மீர் அரசு இயற்கை காய்கறிகளின் சாகுபடியின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்த சமையலறை தோட்டம் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
 7. இந்தியாவில் புவிசார் குறியீடு பெற்ற மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகா முதலிடத்திலும் தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ளது
வர்த்தக செய்திகள்
 1. அனில் அகர்வாலின் வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக ஸ்ரீனிவாசன் வெங்கடகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
 2. பணமதிப்பு நீக்கம், சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் போன்றவற்றால் உருவான பாதிப்புகளில் இருந்து இந்தியா மீண்டு விட்டதாக உலக வங்கி கூறியுள்ளது
 3. ரன்ஸ்டாட் இன்சைட்ஸ் என்டர் நிறுவனம் வெளியிட்ட அதிக சம்பளம் பெரும் நகரங்களின் பட்டியலில் இந்தியாவில் உள்ள பெங்களூரு முதலிடத்தில் உள்ளது. இங்கு ஊழியர்களுக்கு ரூ.10.8 லட்சம் வரை சம்பளம் அளிக்கப்படுகிறது
 4. மதிப்பு மிக்க வங்கிகளின் பட்டியலில் எச்டிஎஃப்சி வங்கி முதலிடத்திலும், மஹேந்திர வங்கி இரண்டாமிடத்திலும் ,எஸ்பிஐ வங்கி மூன்றாம் இடத்திலும் உள்ளன
 5. 2018-2019 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி3% இருக்கும் என உலக வங்கி தெரிவித்துள்ளது
விளையாட்டு செய்திகள்

 1. சர்வதேச பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலில் இந்திய வீராங்கனை மந்தனா 4-வது இடத்துக்கு முன்னேற்றம்
 2. உலக டென்னிஸ் தரவரிசையில் ஆடவர் பிரிவில் ரபெல் நடால்லும் , பெண்கள் பிரிவில் சிமோனா ஹாலெப் தொடர்ந்து முதலிடம் வகிக்கின்றனர்
 3. தைபே சாலஞ்சர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி சாம்பியன் பட்டம் வென்றார்.
 4. புரோ கபடி லீக் போட்டியில் பங்கேற்கும் தமிழ் தலைவாஸ் அணியின் புதிய தலைவராக கேரளா மாநிலத்தை சேர்ந்த பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார்
 5. ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் உள்ள சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரேன் ஐபிஎல் போட்டியில் 100 விக்கெட்டுகளை எடுத்த 3வது வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை பெற்றார்

No comments:

Post a Comment