Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 19th April 2018

உலக செய்திகள்
 1. இங்கிலாந்தில் இந்திய நிறுவனங்கள் சுமார் 9,300 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பிரதமர் நரேந்திர மோடியின் லண்டன் பயணத்தின் போது கையெழுத்தாகியுள்ளது.
 2. மாலத்தீவில், உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள சொகுசு விடுதி, வரும் நவம்பர் மாதம் திறக்கப்பட உள்ளது. அங்குள்ள ரங்காலி (Rangali) என்ற தீவில், கடல்மட்டத்திலிருந்து 16 புள்ளி 4 அடி ஆழத்தில் இந்த விடுதி அமைக்கப் பட்டுள்ளது.
 3. ஆண்களே ஆதிக்கம் செலுத்தும் பாகிஸ்தானில், சீமா கமீல் என்கிற பெண் யுனைடெட் வங்கியின் தலைமைச் செயல் அலுவலர் பொறுப்பில் இருந்து அந்த வங்கியைத் திறம்பட நடத்தி வருகிறார்.
 4. உலகில் 95 மக்கள் சுகாதாரக் குறைவான காற்றை சுவாசிப்பதாக அமெரிக்காவின் உள்ள  மாசசூஸெட்ஸிஸ் உள்ள எச்ஐஏ நிறுவனம் தெரிவிக்துள்ளது 
 5. உலகிலேயே மூன்று முகம் கொண்ட மனிதன் என்ற பெயரை பிரான்ஸ் நாட்டின் ஜேரோம் ஹோமோன் பெற்றுள்ளார்.
 6. அமெரிக்க உளவுத்துறை சிஐஏ வின் புதிய இயக்குநராக "கினா ஹஸ்பெல்" நியமிக்கப்பட்டுள்ளார்.
 7. சவுதி அரேபியாவில் 12 துறைகளில் வெளிநாட்டு பணியாளர்கள் பணிபுரிய மற்றும் தொழில் செய்ய அடுத்த ஆண்டின் துவக்கத்தில் தடைவிதிக்க முடிவு செய்துள்ளது.
 8. சவுதி அரேபியாவில் 38 வருடத்திற்கு பிறகு திரையரங்கு திறக்கப்பட்டு அதில் முதன் முறையாக "பிளாக் பந்தர் " என்ற ஹாலிவுட் படம் திரையிடப்பட்டது.
 9. பேஸ்புக் நிறுவனர் "ஜூக்கர்பெக்" அமெரிக்க கவாய் தீவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்ட பாதிப்பின் நிவாரண உதவிக்காக ரூ 10 லட்சம் வழங்கியுள்ளார்.
தேசிய செய்திகள்
 1. ரோஹிங்யா முஸ்லீம்களின் வலியை உணர்த்தும் புகைப்படங்களை எடுத்து ராய்டர்ஸ் குழுவுக்கு புலிட்சர் விருது வழங்கப்பட்டது
 2. ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு ஏழை பெண்களின் திருமண உதவி அளிப்பதற்காக சந்திரனா பெல்லி கனகா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்
 3. இந்திய ரயில்வேயில் பணிக்காலத்தின் போது இரயில்வே டி பிரிவு ஊழியர்கள் உயிரிழந்தால் அவர்களது வாரிசுகளுக்கு வேலை வழங்க கல்வி தகுதி தேவையில்லை என்று இந்தியன் இரயில்வே அறிவித்துள்ளது
வர்த்தக செய்திகள்
 1. இந்திய தனிநபர் ஆதார் ஆணையமானது மின்னனு ஆதார் கார்டிற்கான  கடவுச்சொல் முறையை ஊர் தபால் குறியீட்டில் இருந்து மாற்றி 8 இலக்கமாக அறிவித்துள்ளது.
 2. எஸ்.பி.ஐ வங்கி நாடு முழுவதும் ரூ 7000 கோடி பணத் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
 3. இந்திய ரிசர்வ் வங்கி மும்பை சிட்டி கூட்டுறவு வங்கியின் பணம் எடுக்கும் வரம்பை ரூ 1000 ஆக குறைத்துள்ளது.
 4. இந்தியாவில் கடந்த மார்ச் மாத மொத்த விலை பண வீக்க  விகிதம்47 சதவீதமாக உள்ளது.இது கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைவானதாகும்.
 5. பி.எஸ்.என்.எல் நிறுவனம் ஆனது தனியார் கேபிள் டீவி ஆபரேட்டர்கள் வழியாக பிராட்பேண்ட் சேவையை வழங்க முடிவு செய்துள்ளது.
விளையாட்டு செய்திகள்

 1. 2018 ஐ.பி.எல் போட்டியில் புள்ளி பட்டியலில் கொல்கத்தா அணி முதல் இடத்தில் உள்ளது.
 2. 12 ஆவது தெற்காசிய கால்பந்து போட்டியில் குரூப் "பி" பிரிவில் இந்தியா இடம்பெற்றுள்ளது.
 3. சர்வதேச அளவிலான போர்த் பிஷ்ஷீர்  போட்டி கிரீஸ் நாட்டில் நடைபெற்றது இதில்  (தமிழ்நாடு) முகப்பேர் வேலம்மாள் கல்வி மாணவர் பிரக்யானந்தன் முதலிடம் பிடித்தார்
 4. ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ஜஸ்டின் லங்கர் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment