Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 22nd April 2018

உலக செய்திகள்
  1. மெக்ஸிகோவில் எதிர்காலக் காடு எனப் பொருள் படும் ‘ஃபியூட்சர் ஃபாரெஸ்ட்’ (Future Forest ) என்ற தலைப்பில் பிளாஸ்டிக் குப்பைகளைக் கொண்டு பல்வேறு கலைப்பொருட்கள் செய்யப்பட்டு காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.
  2. டேமியன் கிரேனோசிக் (Damian Granosik) எனும் கலைஞர் சிறந்த கட்டமைப்புக்கான கட்டிடத்தை வடிவமைக்கும் போட்டியில் மடக்கிய நிலையில் இடம் பெயர்த்தக் கூடிய கட்டிடத்தை வடிவமைத்து சாதனைப் படைத்துள்ளார்.
  3. சீனக் கடற்படையின் லியானிங் கப்பலில் இருந்து ஜே 15வகைப் போர்விமானங்கள் தைவான் அருகே பசிபிக் கடற்பகுதியில் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது.
  4. அதிக நேரம் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோருக்கு மனச்சோர்வு அதிகளவு ஏற்படுவதாக சான்ப்ரான்சிஸ்க்கோ மாகாண பல்கலைக்கழக பேராசிரியர் எரிக் பெப்பர் மற்றும் இணை பேராசிரியர் ரிச்சர்டு ஹார்வி ஆகியோர் தெரிவித்துள்ளார்
தேசிய செய்திகள்
  1. விமான நிலைய தீயணைப்பு பணிக்கு முதன்முறையாக கொல்கத்தாவைச் சேர்ந்த ((Taniya Sanyal)) தனியா சன்யால் என்ற இளம்பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.
  2. அனைவருக்கும் வங்கி கணக்கு என்ற பெயரில் கடந்த 2014ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஜன் தன் யோஜனா வங்கி கணக்குகளில், 80 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வைப்புத்தொகை இருப்பதாக தெரியவந்துள்ளது.
  3. வரும் கல்வியாண்டில், நாடு முழுவதும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பி.டெக் மற்றும் எம்.டெக் இடங்களை குறைக்க அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) திட்டமிட்டுள்ளது.
வர்த்தக செய்திகள்
  1. உலகத்தின் மொத்த கடன் தொகை 164 லட்சம் கோடி டாலரை தொட்டுள்ளதாக சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்துள்ளது
  2. இந்தியன் ஓவர்சிஸ் வங்கி தகவல் பயன்பாட்டு சேவைக்காக மத்திய அரசின் தேசிய ஆளுமை சேவை நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. குழந்தை கருவில் உள்ளபோதே டிஎன்ஏவில் சிறு சிறு மாற்றங்களை செய்வதன் மூலம் அதன் குணங்களை மாற்றமுடியும் என்று கலிபோர்னியாவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஹென்றி கீலி கண்டுபிடித்துள்ளார்
விளையாட்டு செய்திகள்
  1. சென்னை மாவட்ட ஹாக்கி சங்கத் தலைவராக ஒலிம்பியான் பாஸ்கரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
முக்கிய தினங்கள்
  1. ஏப்ரல் 22- உலக பூமி தினம்
இரங்கல்
  1. ஜப்பானைச் சேர்ந்த உலகின் வயதான பெண்மணி நபி தஜிமா, தமது 117ஆவது வயதில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

No comments:

Post a Comment