Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs For 6th April 2018

உலக செய்திகள்
 1. சவுதி அரேபியாவுக்கு எட்டாயிரத்து 448 கோடி ரூபாய் (130 கோடி டாலர்) மதிப்பிலான பீரங்கிகளை விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
 2. பால்டிக் கடல் பிராந்தியத்தில் ரஷ்யப் படைகள் போர் ஒத்திகை.
 3. சவுதி அரேபியாவில் 35 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ஏப்ரல் 18ம் தேதி முதல் திரையரங்குகள் செயல்பட தொடங்கும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது
 4. உள்நாட்டுப் போரினால் பாதிப்படைந்து ஏமன் நாட்டிற்கு 87 மில்லியன் டாலர் நிதி வழங்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது
தேசிய செய்திகள்
 1. இந்தியா வந்துள்ள நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச உள்ளார்.
 2. போக்குவரத்து நெரிசல் காரணமாக ஹைதராபாத் நகருக்குள் தனியார் பஸ்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 3. கர்நாடகாவைச் சேர்ந்த எம்.கே.சூரப்பா சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்
வர்த்தக செய்திகள்
 1. உலக வங்கியின் உதவியோடு, உள்நாட்டு நீர்வழிகளை மேம்படுத்த மத்திய அரசு அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் கோடி ரூபாயை செலவிட உள்ளது.
 2. ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் விற்கப்படும் உணவுப் பொருட்கள், பானங்கள் ஆகியவற்றுக்கு 5விழுக்காடு சரக்கு சேவை வரி விதிக்கப்பட்டுள்ளது.
 3. கிரிப்டோ கரன்சிக்கள் எனப்படும் மெய்நிகர் பணங்களை கையாளுவதை நிறுத்திக் கொள்ளுமாறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதனால் 50 லட்சம் இந்தியர்களின் 13 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளுக்கு சிக்கல் எழுந்துள்ளது.
 4. நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம்4 சதவீதமாக உயரும் என்று ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது
 5. நேரடி மானிய திட்டத்தின் மூலம் 83 ஆயிரம் கோடி வரை சேமிக்கப்பட்டுள்ளதாக மத்திய கொள்கைக் குழு தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்
 6. இலங்கை நேபாளம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு ரூ.4,312 கோடி இந்தியா கடன் அளித்துள்ளதாக வெளியுறவு துறை இணை அமைச்சர் வி கே சிங் தெரிவித்துள்ளார்
 7. இந்திய ரிசர்வ் வங்கியானது நடப்பு நிதி ஆண்டில் ரெப்போ விகிதம் மாற்றமின்றி 6 சதவீதமாக இருக்கும் என அறிவித்துள்ளது
 8. ஆன்லைன் பயணப் போர்டல் தளமான Makemytrip இந்தியாவின் முன்னணி ஆன்லைன் விற்பனைத் தளமான பிளிப்கார்ட்(Flipkart) உடன் இணைந்துள்ளது
விளையாட்டு செய்திகள்
 1. ஐ.பி.எல். தொடரில் இருந்து டெல்லி டேர்டெவில்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் ரபடா காயம் காரணமாக விலகியுள்ளார். டெஸ்ட் தரவரிசையில், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ரபடா முதல் இடத்தில் இருப்பவர். 4 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு டெல்லி அணி, இவரை ஏலம் எடுத்திருந்தது.
 2. ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் பளுதூக்குதல் போட்டியினல் 53 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சஞ்ஜிதா சானு தங்கப்பதக்கம் வென்றார்.
 3. ஐசிசி வெளியிட்டுள்ள சர்வதேச பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் இந்திய அணிக் கேப்டன் விராட் கோலி இரண்டாவது இடத்தில் உள்ளார்
 4. ஆஸ்திரேலியாவில் கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் சைக்கிள் பந்தயத்தில் ஆஸ்திரேலிய அணி உலக சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றுள்ளது
 5. ஆஸ்ட்ரேலியாவில் கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெற்றுவரும் 21வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பளு தூக்குதலில் 69 கிலோ எடை பிரிவில் தீபக் லாதர் மூன்றாம் இடம்பெற்று வெண்கலப்பதக்கம் வென்றார்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
 1. விண்வெளிக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் விண்வெளி ஓட சோதனையை அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் நிறுவனமான Virgin Galatic வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
 2. விண்வெளியில் நொடிக்கு 1000 புகைப்படங்களை எடுக்கும் சைபர் கேமராவை இந்தியாவைச் சேர்ந்த பேராசிரியர் விக் தில்லோன் தலைமையிலான ஷெப்பீல்ட் பல்கலைக்கழக குழு கண்டுபிடித்துள்ளது
 3. பூமியில் இருந்து மிக அதிக தூரத்தில் இருக்கும் இக்கார்ஸ் என்ற நீலநிற நட்சத்திரம் ஒன்றை தி ஹப்பிள் ஸ்பெஸ் டெலஸ்கோப் என்ற தொலைநோக்கி மூலம் நாசா கண்டுபிடித்துள்ளது
இரங்கல்
 1. மலையாள நடிகர் கொல்லம் அஜீத் காலமானார்

No comments:

Post a Comment