Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs For 7th April 2018

உலக செய்திகள்
 1. ஆப்பிரிக்கா நாடான சியராலியோவின் புதிய அதிபராக ஜூலியஸ் மாடா பயோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்
 2. உலக அளவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகம் நடக்கும் நாடுகளின் பட்டியலில் தென் ஆப்பிரிக்கா முதலிடத்தில் உள்ளது
 3. சிங்கப்பூருக்கு அடுத்தபடியாக சூரிச் விமானநிலையம் ஐரோப்பாவின் சிறந்த விமான நிலையம் என்ற அந்தஸ்த்தை பெற்றது
 4. வேகமாக அழிந்துவரும் காண்டாமிருகங்களை பாதுகாக்க சுமார் 6 லட்சம் டாலர் மதிப்பில் ட்ரான் மீட்டர் கருவிகளை பொருத்த கென்யா அரசு முடிவு செய்துள்ளது
 5. உலக அளவில் பருத்திய ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது
தேசிய செய்திகள்
 1. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட பன்னிரண்டாயிரம் குதிரைத்திறன் கொண்ட முதல் ரயில் எஞ்சினைப் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைக்கிறார். நம் நாட்டில் இதுவரை ஆறாயிரம் குதிரைத்திறன் கொண்ட எஞ்சின்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
 2. மாநில அரசின் சார்பில் நடத்தப்படும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கும் பெண்கள் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணத்தை பிஹார் அரசு குறைத்துள்ளது.
 3. டிஎன்பிஎஸ்சி மூலம் 320 சிவில் நீதிபதிகள் நேரடியாக தேர்வுசெய்யப்பட இருக்கிறார்கள்.
 4. சென்னை குடிநீர் தேவைக்காக காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலி அடுத்த பேரூரில் அமைக்கப்படும் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலைய கட்டுமானப் பணிக்காக ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை ரூ.1,800 கோடி நிதியுதவி அளித்துள்ளது
 5. தேசிய கல்வி நிறுவனங்களின் தரவரிசைப்பட்டியலில் அண்ணா பல்கலைக்கழக 10வது இடத்தில் உள்ளது
 6. அம்மா வைஃபை திட்டம் சென்னை உள்பட 5 இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது
வர்த்தக செய்திகள்
 1. இந்தியாவின் அன்னியச் செலாவணி கையிருப்பு 42,400 கோடி டாலராக அதிகரித்துள்ளது. மார்ச் கடைசி வாரத்தில் மட்டுமே 180 கோடி டாலர் அளவிற்கு அன்னிய செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
 2. சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கான கடன் வட்டியை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி குறைத்துள்ளது இதன்படி ரூபாய் 2 கோடி வரையிலான கடன்களுக்கு5% வும் ரூ.2 கோடிக்கு மேல் உள்ள கடன்களுக்கு 0.15%-0.96% வரை குறைக்கப்பட்டுள்ளது
 3. சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாயில் போர் விமானங்களை வாங்கவும், இந்தியாவில் தயாரிக்கவும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்திய விமானப் படை அழைப்பு விடுத்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
 1. 77 கிலோ எடைப்பிரிவில் காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தமிழக வீரர் சதிஷ்குமார் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
 2. காமன் வெல்த் போட்டியில் 85 கிலோ எடைப்பிரிவினருக்கான பளுதூக்கும் போட்டியில் இந்தியரான வெங்கட் ராகுல் ரகாலா (Venkat Rahul Ragala) என்பவர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
 3. 107 வது டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி சீனாவின் Tianjin நகரில் நடைபெற்றுவருகிறது இதில் இரட்டையர் பிரிவில் 43 வது வெற்றியை பெற்றதன் மூலம் புதிய உலக சாதனையை இந்தியாவின் லியாண்டர் பயஸ்(Leander Paes) படைத்துள்ளார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
 1. பன்னாட்டு விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு ஆட்களைக் கொண்டு செல்லும் விண்கலத்தைத் தயாரித்துத் தருவதற்காக போயிங் நிறுவனத்துடன் அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா உடன்பாடு செய்துள்ளது.
 2. குறைந்த செலவில் கடல்நீரைக் குடிநீராக்குவதற்கான கோளவடிவக் கருவியை பிரான்சைச் சேர்ந்த மரைன் டெக் என்கிற நிறுவனம் கண்டறிந்துள்ளது.
முக்கிய தினங்கள்

 1. ஏப்ரல் 7 உலக சுகாதார தினம்

No comments:

Post a Comment