Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs for 8th April 2018

உலக செய்திகள்
 1. சீனாவின் ஹய்நான் மாநிலத்தில் 2018 ஆண்டின் 'போ ஆவ் ஆசிய மன்றம் மாநாடு' போ ஆவ் நகரில் நடைபெற உள்ளது.
 2. உலக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் அடுத்த உலக தமிழ் மாநாடு தெற்கு ஆசியாவின் கம்போடியா நாட்டில் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர்..
 3. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனா பொருட்கள் மீது கூடுதலாக 100 பில்லியன் டாலர்கள் வரியை விதிக்க திட்டமிட்டுள்ளனர்.
தேசிய செய்திகள்
 1. பிரதமர் மோடி ஒரு நாள் பயணமாக சென்னை திருவிடந்தையில் உள்ள ராணுவ தளவாடங்கள் கண்காட்சியில் கலந்து கொள்ள உள்ளார்.
 2. நேபாளம் இந்தியாவுடன் இணைந்து வேளாண்துறை திட்டங்கள் மற்றும் முக்கிய கட்டமைப்பு துறைகளில் இணைந்து செயல்பட சம்மதம் தெரிவித்துள்ளது.
 3. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை இந்தியா வந்துள்ள நேபாள பிரதமர் கே.பி சர்மி ஒலி நேற்று சந்தித்து பேசினார்.
 4. கேரள அரசு விவசாயிகளுக்காக நாட்டிலேயே முதன் முறையாக சமுதாய வானொலி சேவையை அறிமுகம் செய்ய உள்ளது.
வர்த்தக செய்திகள்
 1. 20 பெரிய நகரங்களின் 4ஜி இணைப்பில் பாட்னா முதலிடத்தில் உள்ளது
 2. குருகிராமில் உள்ள இந்தியன் யூனிட் ஆப் தி இன்ஸ்டிடியூட் பார் ஸ்டேடர்ஜி மற்றும் ஹார்வார்ட் பிசினஸ் ஸ்கூல் ஜியோ மூலம் உள்நாட்டு உற்பத்தி65 சதவீதம் வளர்ச்சி அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
 3. 4ஜி சிக்னல் நகரங்களில் சென்னை 2வது இடத்தில் உள்ளது
விளையாட்டு செய்திகள்.
 1. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் மகளிருக்கான துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பேக்கர் தங்க பதக்கமும் ஹீனா சிந்து வெள்ளி பதக்கமும் வென்றனர்.
 2. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் பளு தூக்குதல் 69 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் பூனம் யாதவ் தங்கம் வென்றார்.
 3. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் ஆண்களுக்கான பளு தூக்குதலில் 85 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் வெங்கட் ராகுல் 338 கி.கி எடையை தூக்கி தங்கம் வென்றார்.
 4. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் ரவிகுமார் வெண்கலம் வென்றார்.
 5. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் பளு தூக்குதல் 94 கிலோ எடை பிரிவில் இந்திய விகாஸ் தாகூர் வெண்கலப் பதக்கம் வென்றார்.
 6. 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் மும்பை வீரர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக விலக உள்ளார்.
 7. இந்தியாவின் லியாண்டர் பயஸ் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பிரிவில் 43 வது முறையாக பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.
 8. ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணியின் வீரர் ககிசோ ரபாடா விற்கு பதில் இங்கிலாந்தின் பிளெங்கெட் சேர்க்கப்பட்டுள்ளார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
 1. அமெரிக்காவின் ஓரியன் ஸ்பான் என்ற நிறுவனம் பூமியை சுற்றி வரும் விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு இணையாக "அரோரா ஸ்டேஷன்" என்ற ஓட்டலை உருவாக்கி வருகிறது.
 2. அமெரிக்க வாழ் இந்தியரான அபினவ் கபூர் சத்தமின்றி பேசுவதை கேட்கச் செய்யும் ஆல்டெர்இகோ என்ற கருவியை கண்டுபிடித்துள்ளார்.
 3. இந்திய ஆராய்ச்சியாளர்கள் சத்தீஸ்கரில் விளையும் மூன்று அரிசி வகைகளுக்கு புற்றுநோய் அழிக்கும் ஆற்றல் உள்ளதாக கண்டுபிடித்துள்ளனர்.
 4. இஸ்ரோ நிறுவனம் கடல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ளும் செயற்கைக்கோளை பி எஸ் எல் வி சி-41 விண்ணில் செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
 5. தமிழக விவசாயிகளுக்கு உதவும் வகையில் தமிழக அரசின் சார்பில் உழவன் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

No comments:

Post a Comment