Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 2nd April 2018

உலக செய்திகள்
 1. சீன பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா கூறியுள்ள நிலையில், அதற்கு பதிலடியாக அமெரிக்காவின் 128 பொருட்களுக்கு சீனா அரசு சுமார் 3பில்லியன் டாலர் அளவிற்கு இறக்குமதி வரி விதித்துள்ளது.
 2. சீனாவால் கைவிடப்பட்ட டியாங்காங்-1 எனப்படும் விண்வெளி ஆய்வு நிலையம், நொறுங்கி பசிபிக் கடலில் விழுந்துவிட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 3. கென்யா முதல் சூடான் வரை ஏற்பட்டுள்ள நிலப்பிளவு காரணமாக ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளவுபட வாய்ப்பு இருப்பதாக புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
 4. உலகிலேயே முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவின் கேப்டன் நகரில் தண்ணீரைப் பாதுகாக்க காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்
தேசிய செய்திகள்
 1. மார்ச் மாதத்தில் தொண்ணூறாயிரம் கோடி ரூபாய்(90,000Crore) சரக்கு சேவை வரியாகப் பெறப்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறைச் செயளாலர் ஹாஸ்முக் ஆதியா தெரிவித்துள்ளார். இது முந்தைய ஆண்டைவிட 17% அதிகம் ஆகும்
 2. லண்டனில் உள்ள மதாம் துசாட்ஸ் மெழுகு சிற்பங்களின் கூடம் போல் இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் லுதியானாவிலும் ஒரு மெழுகு சிற்பக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
 3. இந்தியா மற்றும் தென்கொரியா இடையேயான நல்லுறவை மேம்படுத்தும் வகையில் இருநாட்டு கடற்படை வீரர்களின் கூட்டு பயிற்சி
 4. ராஜஸ்தான் மாநிலத்தில் தனியார் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் விலக்கு
வர்த்தக செய்திகள்
 1. நாட்டின் மெகா பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி கடந்த நிதி ஆண்டில்60 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது
 2. சுஸுகி தயாரிப்பில் அதிகம் விற்பனையாகும் பலேனோ, விடாரா பிரீஸா உள்ளிட்ட கார்களை டொயோடா விற்பனையகத்தில் விற்க ஒப்புக் கொண்டுள்ளது.
 3. கடந்த நிதி ஆண்டில் பொதுப்பங்கு வெளியீடு (ஐபிஓ) மூலம் ரூ.84,357 கோடியை நிறுவனங்கள் திரட்டி இருக்கின்றன.
 4. பிஎம்டபிள்யூ, அடுத்த தலைமுறையை திறன் மிக்கவர்களாக உருவாக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட திட்டத்துக்கு `ஸ்கில்நெக்ஸ்ட்’ என பெயரிடப்பட்டுள்ளது.
விளையாட்டு செய்திகள்
 1. பெல்ஜியத்தில் நடைபெற்ற மகளிருக்கான சர்வதேச சைக்கிள் பந்தயத்தில் டச்சு சைக்கிள் வீராங்கனை அன்னா வான் பிரகன் முதல் வென்றார்.
 2. இங்கிலாந்தில் உள்ள சசக்ஸ் பகுதியில் நடைபெற்ற சர்வதேச கோலி விளையாட்டுப் போட்டியில் அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட 10 நாடுகள் பங்கேற்றன. இதில் ஜெர்மனி அணி உலகச் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
 3. தாய்லாந்தில் நடைபெற்ற அலைத்துடுப்பு விளையாட்டு போட்டியில் 6KM பிரிவில் இந்திய வீரர் சேகர் தங்கம் வென்றார்
 4. அமெரிக்காவில் நடைபெற்ற மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீரர் ஜான் இஸ்னெர் சாம்பியன் பட்டம் வென்றார்
 5. 45வது பி.ஜான் நினைவு அகில இந்திய கைப்பந்து போட்டியில் எஸ்.ஆர்.எம் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
 1. ஐரோப்பிய நாடான பின்லாந்தில் ரோபோக்கள் மூலம் பாடம் நடத்தப்படுவதால் மாணவர்களின் கல்வித்தரம் வெகுவாக அதிகரித்துள்ளது. மனித உடலமைப்பு கொண்ட இந்த ரோபோக்கள் கங்னம் ஸ்டைல் ((Gangnam Style)) நடனமாடியபடி கணிதம் உள்ளிட்ட பாடங்களை மாணவர்களுக்கு நடத்தி வருகின்றன.
 2. கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் டேவிட் மோசஸ் தலைமையிலான குழு மூளை நினைப்பதை எழுத்துக்களாக மாற்றும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளது
முக்கிய தினங்கள்

 1. ஏப்ரல் 2 - உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்

No comments:

Post a Comment