Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 14th May 2018

உலக செய்திகள்
 1. மத்திய இலங்கையில் சுமார் 6 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பில் சாலைப்பணிகளை மேற்கொள்வதற்கான கடன் வழங்க சீனா ஒப்புதல் அளித்துள்ளது.
 2. கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேவிட் கிளான்ஸ்மேன் எனும் நுண்ணுயிரியல் துறை ஆய்வாளர் தலைமையிலான குழு ஒரு நத்தையின் நினைவுகளை மற்றொரு நத்தைக்கு மாற்றிப் பொருத்தும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளது
 3. உலகின் மிக உயர்ந்த எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை ஆஸ்திரேலியே வீரர் ஸ்டிவ் பிலைன் ( steve plain ) குறைந்த நாட்களில் அடைந்து சாதனைப் படைத்துள்ளார்.
 4. பாகிஸ்தானில் பார்வை குறைபாடு உடைய யூசப் சலீம் நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்று பாகிஸ்தானின் முதல் பார்வை குறைபாடுடைய நீதிபதியானர்
 5. வடகொரியாவில் நடத்தப்பட்ட அணு ஆயுத சோதனை காரணமாக மேன்டேப் என்ற மலை4 அடி நகர்ந்தும் 1.6 அடி பூமிக்குள் புதைந்தும் உள்ளது
தேசிய செய்திகள்
 1. பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கிலிருந்து 3 மாதத்துக்கு ஒருமுறை 15 ரூபாய் பிடித்தம் செய்யும் முறை தொடரும் என வங்கியின் தலைவர் ரஜனீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
 2. பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு விளம்பரத்திற்காக மட்டும் 4343 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது
 3. கர்நாடகாவில் கடந்த 40 ஆண்டுகளில் 5வருட ஆட்சியை முழுமையாக பூர்த்திசெய்யும் முதலமைச்சர் என்ற பெருமையை சித்தராமையா பெற்றார்
 4. மத்திய அரசு வறட்சி மற்றும் வெள்ளம் உள்ளிட்டவற்றால் பாதிப்படைந்த 4மாநிலங்களுக்கும் 1யூனியன் பிரதேசத்திற்கும் பேரிடர் நிவாரண நிதியாக ரூ.1,161 கோடியை மத்திய அரசு வழங்கி உள்ளது
 5. சுற்றுசூழல் மற்றும் வனத்துறையில் பசுமை திறன் மேம்பாட்டு திட்டதின் கீழ்5 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
வர்த்தக செய்திகள்
 1. நாட்டின் பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில்85 சதவீதமாக உயர்ந்துள்ளது
நியமனங்கள்
 1. இரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் கூடுதலாக நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார துறைக்கு அமைச்சராக பொறுப்பேற்றார்
 2. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக எஸ்.எஸ்.அலுவாலியா நியமிக்கப்பட்டார்
விளையாட்டு செய்திகள்
 1. மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் சிவெரேவ் (Zverev) சாம்பியன் பட்டம் வென்றார்.
 2. ஸ்பானிஷ் கிராண்ட்பிரி கார் பந்தயப் போட்டியில் பிரிட்டன் வீரர் லீவிஸ் ஹாமில்டன் வெற்றி பெற்றுள்ளார்.
 3. ஹனோவர் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் ஹீனா சிந்து தங்கம் வென்றார்
 4. ஆசிய கேடட் மற்றும் ஜீனியர் ஜூடோ சாம்பியன் போட்டியில் இந்திய அணி 3தங்கம் உள்பட 9பாதகங்களை வென்றுள்ளது
 5. ஸ்விட்சர்லண்ட் வீரர் ரோஜர் பெடரர் உலக டென்னிஸ் சமேளனம் வெளியிட்ட தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்
 6. மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் ராஜஸ்தான் அணி கேப்டன் ரெகானேவுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிகப்பட்டுள்ளது.
 7. தமிழ்நாடு பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான டென்னிஸ் போட்டியின் ஆண்கள் பிரிவில் சென்னை பல்கலைக்கழக அணியும் பெண்கள் பிரிவில் அண்ணா பல்கலைக்கழகமும் சாம்பியன் பட்டம் வென்றனர்

No comments: