உலக செய்திகள்
- பாகிஸ்தான் நாட்டில் மிப்டா இஸ்மாயில் புதிய நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- தென்கொரியாவில் பின்பற்றி வரும் கால நேரத்தை வட கொரியாவும் பின்பற்ற முடிவு செய்துள்ளது.
- ஆப்கானிஸ்தானில் இந்தியாவும் சீனாவும் இணைந்து பொருளாதார திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.
- சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் சர்வதேச அளவில் இந்தியாவும் சீனாவும் வல்லமை மிக்க நாடுகளாக உருவெடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.
- அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜெருசலேமில் புதிதாக கட்டப்பட்டுள்ள அமெரிக்க தூதரகத்தை திறந்து வைக்க ஜெருசலேம் செல்ல திட்டமிட்டுள்ளார்.
தேசிய செய்திகள்
- சிக்கிம் முதல்வர் பவன் சாம்லிங் மாநில முதல்வராக அதிக ஆண்டு பதவி வகித்து சாதனை படைத்துள்ளார்.
- மத்திய அரசு இந்தியா முழுவதும் பயன்படுத்தும் டீ.வி செட் ஆப் பாக்ஸ்களில் "சிப்" வைக்க முடிவு செய்துள்ளது.
- மத்திய அரசின் தீன தயாள் உபத்யாயா கிராம் ஜோதி யோஸ்னா திட்டத்தின் மூலம் அனைத்து கிராமத்திற்கு மின் வசதி பெற்றுள்ளாதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- புதுச்சேரி ஆளுநர் கிரன் பேடி அசுத்தமான கிராமங்களுக்கு இலவச அரிசி வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
வர்த்தக செய்திகள்
- மத்திய கொள்கை குழுவின் துணை தலைவர் ராஜிவ் குமார் 2018-2019ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரம்5 சதவீதம் வளர்ச்சி அடையும் என தெரிவித்துள்ளார்.
- 2017-2018ஆம் ஆண்டில் எல்.ஐ.சி நிறுவனம் காப்பீட்டு திட்டத்தில் கீழ் முதலாண்டு பிரீமியம் வருவாயாக 1,34,552 கோடியாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது.
அறிவியல் மற்றும் தொழில் நுட்பம்
- நாசா விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் உள்ள மண் மற்றும் பாறைகளை பூமிக்கு கொண்டு வந்து ஆய்வு முடிவு செய்துள்ளது.
- அமெரிக்காவின் யாழ் பல்கலைக்கழக நிபுணர்கள் உயிருடன் இருக்கும் பன்றி மூளையை எடுத்து உயிருடன் இருக்க செய்து சாதனை படைத்துள்ளனர்.
- அமெரிக்க கொலரோடா பல்கலைக்கழக சேர்த்த வேதியியல் நிபுணர்கள் சுற்றுச்சூழல் பாதிக்காத பிளாஸ்டிக் பொருட்கள் தயாரித்துள்ளனர் .
- அதிநவீன ஏ.வி.ஆர் ஏவுகனையை தேஜஸ் போர் விமானம் மூலம் செலுத்தி வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
- இந்திய கிரிக்கெட் வாரியம் சி.கே நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது மகளிருக்காக கிரிக்கெட் வாரிய நிர்வாக குழு உறுப்பினர் டயானா எடுல்ஜிக்கு வழங்க முடிவு செய்துள்ளது.
- உலக வில்வித்தை போட்டியில் இந்தியாவின் அபிஷேக் வர்மா மற்றும் ஜோதி சுரேகா ஆகியோர் கலப்பு இரட்டையர் பிரிவுவில் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
- இந்தியாவின் சாய்னா நேவால் , பிரணாய் ஆகியோர் ஆசிய பேட்மிண்டன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சேகர் காயம் காரணமாக விலகியுள்ளார்.
No comments:
Post a Comment