உலக செய்திகள்
- ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், பல நாடுகளை இணைக்கும் சீனாவின் பொருளாதார சாலை திட்டம் தொடர்பான தீர்மானத்தில் கையெழுத்திட இந்தியா மறுத்துள்ளது.
- 7வது ஃபார்முலா ஒன் பந்தயம் கனடாவின் மான்ட்ரீல் நகரில் நடைபெற்றது. இதில் ஜெர்மனியைச் சேர்ந்த செபஸ்டியன் வேட்டல் வெற்றி பெற்றார்.
தேசிய செய்திகள்
- எரிபொருள் தேவையை குறைக்கவும், சுற்றுசூழல் பாதுகாக்கும் வகையில் லித்தியம் அயன் பேட்டரிகளை இந்தியாவிலே தயாரிக்க, ராசி சோலார் பவர் என்ற நிறுவனத்துடன் இந்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
- வங்கிகள் தனது வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் இலவச சேவைக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
- கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த வன்முறையால் ரூ.80 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
விளையாட்டு செய்திகள்
- மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் வங்கதேச அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
- கிராண்ட்ஸ்லாம் தொடரான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் 9 ஆண்டுகளுக்கு பிறகு ருமேனியாவின் சிமோனா ஹாலப் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
- கண்டங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து போட்டித்தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில், ஸ்பெயின் நாட்டை சேர்ந்த நடால் 11வது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- ஜப்பானிய நிறுவனம் ட்ரோன்-இயங்கும் பைசல் ஒன்றை உருவாக்கியுள்ளது. இது பயனர்களை, சூரியனிலிருந்து பாதுகாக்கும்.
இரங்கல்
- ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையின் முதல் படமான ‘டாக்டர் நோ’ படத்தின் கதாநாயகி யூனிஸ் கேசன் காலமானார்.
No comments:
Post a Comment