Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Coaching

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 12th June 2018

உலக செய்திகள்
  1. 15வது ஆசிய பசுபிக் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப மாநாடு, இலங்கை அதிபர் சிறிசேன தலைமையில் இன்று கொழுப்பில் தொடங்கியது.
  2. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் ஆகியோர் இன்று(ஜுன் 12) சிங்கப்பூர் சென்டோசா தீவில் சந்தித்தனர். இந்த நிகழ்வு உலக வரலாற்றில் முதன் முறையாக நடந்த நிகழ்வாகும்.
  3. வடகொரியாவில் உள்ள அணு ஆயுத கிடங்குகள் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என சிங்கப்பூரில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அறிவித்துள்ளார்.
  4. மின்னல் தாக்குவதால் உயிர் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மின்னல் வருவதை முன்னரே அறியும் சென்சாரை தயாரிக்கும் அமெரிக்க நிறுவனத்திடம் ஒடிசா அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
  5. அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே அணு ஆயுதத்தை ஒழிப்பதற்கான முக்கியமான ஒப்பந்தம் கையெழுத்தானது.
தேசிய செய்திகள்
  1. இந்திய இரயில்வே துறை மெனு ஆன் ரயில்ஸ்’(அனைத்து வகையான உணவு வகைகள் பற்றிய விவரங்களை காணலாம்) மற்றும் ‘ரயில் மதத்’(பயணிகள் குறைதீர்ப்பை துரிதப்படுத்தவும்) ஆகிய இரண்டு புதிய செயலிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
  2. மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான நீட் தேர்வினை இனி சி.பி.எஸ்.இ நடத்தாது என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
  3. இந்தியாவின் முதல் தேசிய போலீஸ் அருங்காட்சியகத்தை டெல்லியில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
  4. மோடி கேர் எனப்படும் தேசிய சுகாதாரத் திட்டத்தில் இணைய, ஜுன் 14ம் தேதி 14 மாநிலங்களுடன்ஒப்பந்தம் போடப்பட இருப்பதாக மத்திய இணை அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
விளையாட்டு செய்திகள்
  1. ஆசிய அளவில் ஜப்பானில் நடைபெற்ற ஜுனியர் தடகள போட்டியில், நீளம் தாண்டுதலில்(15.75 மீட்டர்) கோவையை சேர்ந்த கமல் ராஜ் தங்கப் பதக்கம் வென்றார்.
முக்கிய தினங்கள்
  1. ஜுன் 12 – உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்.
Post a Comment