Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 13th June 2018

உலக செய்திகள்
  1. சீன அரசக்குடும்பம் 18ஆம் நூற்றாண்டில் பயன்படுத்திய பூச்சாடி ஒன்று, பிரான்சில் 19 மில்லியன் டாலருக்கு ஏலம் போயுள்ளது.
  2. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் சிங்கப்பூரில் 06.18 சந்தித்துப் பேசினர். அப்போது வடகொரியாவின் அணுஆயுதங்களை முழுமையாக ஒழிப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
  3. சூரிய கிரண் XIII – இந்திய நேபாளம் நாடுகளுக்கிடையேயான 13 வது கூட்டு ராணுவ பயிற்சி உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பிதோராகார்க் என்னும் இடத்தில் நடைபெற்றது. இந்த பயிற்சி வருடத்திற்க்கு இரு முறை நடைபெறும்.
  4. சர்வதேச அளவிலான தகவல் மற்றும் தொலைதொடர்பு மாநாடு நேபாளத்தின் தலைநகரமான காத்மண்டு-வில் நடைபெற உள்ளது.
தேசிய செய்திகள்
  1. அடல் புத்தாக்கத்திட்டத்தின் கீழ், ஆய்வகங்களை நிறுவுவதற்காக 3 ஆயிரம் பள்ளிகள் கூடுதலாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
  2. இந்திய விமானப்படைக்கு 6 அப்பாச்சி ரக அதி நவீன ஹெலிகாப்டர்களை விற்பனை செய்ய அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  3. அடல் பென்ஷன் திட்டத்தில் ஓய்வூதியத் தொகையை மாதத்திற்கு 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது
  4. அடல் இனோவேசன் மிஷன் – என்ற திட்டத்தின் கீழ் நிதி ஆயோக்- கானது நாடு முழுவதும் சுமார் 3000 அடல் டிக்கரிங்ஸ் லேப் நிறுவ உள்ளது.
  5. இந்தியாவில் அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தில் மாகாராஷ்டிரா மற்றும் குஜராத் உள்ளது.
  6. Data visualization App – யுனிசெப் அமைப்பானது இந்தியாவில் கல்வி சூழ்நிலைகளின் சிக்கலான பகுப்பாய்வுகளை எளிய முறையில் காட்சிப்படுத்தி மக்களுக்கு வழங்குவதற்காக இந்த செயலியை வெளியிட்டுள்ளது.
  7. தமிழகத்தில் உள்ள பல்வேறு நீர்த்தேக்கங்களில் நீர் ஆவியாவதைத் தடுக்க ரூ 1,125 கோடியில் 250 மெகாவாட் மிதக்கும் சூரிய சக்தி மின் நிலையங்கள் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
  8. இலக்கிய உலகில் வழங்கப்படும் முக்கிய விருதுகளில் ஒன்றான இயல்விருது இந்த ஆண்டு எழுத்தாளர் வண்ணதாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
விளையாட்டு நிகழ்வுகள்
  1. 2026-ஆம் ஆண்டு உலகக் கோப்பைப் கால்பந்துப் போட்டிகளை நடத்துவதற்கு அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன
  2. இந்தியக் கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலிக்குச் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான பாலி உம்ரிகள் விருது வழங்கப்பட்டுள்ளது.
  3. French Open Tennis போட்டியில் 11வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ரஃபேல் நடால்
  4. இந்திய கால்பந்து சம்மேளனத்தின் சார்பாக வழங்கும் சிறந்த இந்திய கால்பந்து வீரர் விருது இந்தியாவின் சுனில் செத்ரிக்கு வழங்கப்பட்டுள்ளது
  5. கனடா நாட்டில் நடைபெற்ற பார்முலா 1 கார் பந்தையத்தின் 7-வது கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் செபஸ்டியான் வெட்டல் தனது 50-வது கிராண்ட் பிரிக்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.