Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 19th July 2018

உலக செய்திகள்
 1. விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் ராக்கெட்டை 9-வது முறையாக அமேசான் நிறுவனம் வெற்றிகரமாக செலுத்தியுள்ளது. ‘ப்ளூ ஆரிஜின்‘ என பெயரிடப்பட்டுள்ள இந்த ராக்கெட் அமெரிக்காவின் டெக்சாஸ்
 2. மாகாணத்தில் இருந்து ஏவப்பட்டது.
 3. ஸ்கைடிராக்ஸ் என்ற நிறுவனம் 2018-ம் ஆண்டிற்கான சிறந்த விமான நிறுவனத்திற்கான விருதை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்-க்கு வழங்கியுள்ளது. மேலும் கத்தார் ஏர்வேஸ் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.
 4. உலகின் மிகப் பெரிய விமான கண்காட்சி இங்கிலாந்தின் ஃபார்ன்பரோ நகரில் நடைபெற்றது
இந்திய செய்திகள்
 1. The United States Food & Drug Administration (USFDA) எனும் யு.எஸ் ஹெல்த் ரெகுலரேட்டர், சன் ஃபார்மாசியூட்டிகள் இண்டஸ்ட்ரீஸ் புற்றுநோய்க்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் INFUGEM இன்சுலேஷனுக்கு ஒப்புதல் பெற்றுள்ளது.
 2. பல மில்லியன் ஆண்டுகளாக ஏற்பட்ட நில உருவாக்கத்தின் அடுக்குகளைக் குறித்துக் காட்டும், புதை உயிரிப் படிவ அருங்காட்சியகம் அரியலூர் மாவட்டத்திற்கு அருகே உள்ள வாரணவாசியில் தமிழக அரசால் திறக்கப்பட்டுள்ளது.
 3. நாட்டின் முதல் பசுமை திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனம்;(Country’s First Field Still Institute) ஒடிசா மாநிலத்தின் ‘பாரங்க்’(Barang) பகுதியில் அமைக்கப்பட உள்ளது.
 4. வரலாற்று சிறப்புமிக்க தாஜ்மஹாலுக்கு ஏற்படும் மாசுபாடுகள் பற்றி ஆராய மத்திய அரசு ‘சி.கே. மிஷ்ரா’(C.K. Mishra) தலைமையிலான குழு நியமிக்கப்பட்டுள்ளது
 5. வேலையை சரியாக செய்யாமல் உள்ள 50 வயதிற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு ‘கட்டாய ஓய்வு’(compulsory retirement) வழங்கும் முறையை உத்திர பிரதேச மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது
 6. மாநிலத்தின் பசுமை பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க ‘பௌத்தகிரி இயக்கம் (Paudhagiri campaign)‘ஹரியானாவில் தொடங்கப்பட்டுள்ளது
 7. தேசிய மாணவர் படை (Ncc) மற்றும் தேசிய நாட்டு நலப் பணித்திட்டத்தை (Nss) வலுப்படுத்துவது தொடர்பாக ‘ஸ்ரீ அனில் சுவருப்’(Shri Anil Swarup) தலைமையில் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
 1. அண்டத்தின் காந்தவிசை, அகிலத்தின் பெரும் அளவிலான அமைப்பு, கரும்பொருள் (Dark Matter) மற்றும் நிலையற்ற ரேடியோ ஆதாரங்கள் போன்றவை உள்ள பிரபஞ்சத்தினை ஆராய உதவும் புதிய 64-டிஸ் மீர்காட் எனும் வானொலி(ரேடியோ) தொலைநோக்கியை தென் ஆப்பிரிக்கா உருவாக்கியுள்ளது.
விளையாட்டு செய்திகள்
 1. பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் சாட்டிவில் தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் ஈட்டி எறிதலில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார்.
 2. ஆசிய ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் கிரெகோ ரோமன் 77 கிலோ எடை பிரிவில், இந்திய வீரர் சாஜன் தங்கப் பதக்கம் வென்றார்.
 3. பெண்கள் கால்பந்து உலகக் கோப்பை போட்டிகள் அடுத்த ஆண்டு பிரான்சில் நடத்தப்படும். Quadrennial சர்வதேச ஆண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் – 2022 FIFA உலக கோப்பை கத்தாரில் நடைபெற உள்ளது.
 4. ஜூனியர் மகளிர் ஹாக்கி Under-23 six-nations tournament-இல் இந்திய அணி என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வென்றது .
 5. பிரேசில் நாட்டின் ‘பிரேசிலா’ நகரில் நடைபெற்ற 7வது உலக ஜுனியர் வுசு சாம்பியன்ஷிப் போட்டியில் (7th World Junior Wushu Championship) இந்தியா 4 வெள்ளி மற்றும் 5 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது.

No comments: