உலக நிகழ்வுகள்
- இந்தியாவுக்கான இலங்கை தூதராக ஆஸ்டின் பெர்னாண்டோ என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
- இந்தியா மற்றும் கானா இடையே இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.i )பண்பாட்டு பரிவர்த்தனை திட்டம் (Cultural Exchange Programme). ii )இந்திய தர நிர்ணய அமைப்பு மற்றும் கானா தர நிர்ணய அமைப்பு ஆகியவற்றிற்கும் இடையே ஒத்துழைப்பு.
- அலுமினியம்: தி ஃபியூச்சர் மெட்டல்(Aluminium : The Future Metal) என்ற புத்தகத்தை ‘தபன் குமார் சந்த்’ என்பவர் எழுதியுள்ளார்.
இந்திய நிகழ்வுகள்
- தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள மிலிதிகி கிராமத்தில் 2500 ஆண்டுகள் ‘பழைமையான இசை பாறை” கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- அசுத்தமான குளம் மற்றும் நதிநீரை சுத்தமான குடிநீராக மாற்றும் சுலாபக் ஜல் என்ற திட்டம் பீகார் மாநிலத்தில் தர்பங்கா மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் உலகிலேயே பீகார் மாநிலம் மிக மலிவான குடிநீரை வழங்கவுள்ளது.
- உ.வே. சாமிநாத அய்யர் கருவூலம் என்ற நூல் ஆ.இரா. வேங்கடாசலபதி என்பவரால் எழுதப்பட்டு தமிழக ஆளுநர் ‘பன்வாரிலால் புரோகித்’ என்பவரால் வெளியிடப்பட்டுள்ளது
- இந்தியா – ஆசியான் கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் “Strengthening India – ASEN Maritime Cooperation” தொடர்பான 10வது டெல்லி உரையாடல் மாநாடு (Delhi Dialogue - X) புதுடெல்லியில் நடைபெற்றது.
- குஜராத் கடற்கரையிலுள்ள காம்பாட் வளைகுடாவில் கடல் காற்று வளத்தை மதிப்பீடு செய்வதற்காக LiDAR என்னும் தொலையுணர்வு கருவியை தேசிய காற்று ஆற்றல் நிறுவனம் (National Institute Of wind Energy - NIWE) நிறுவியுள்ளது.
No comments:
Post a Comment