Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 23rd July 2018

உலக நிகழ்வுகள்
  1. இந்தியா தொடங்கவுள்ள, சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பில் ((ISA – International Solar Alliance) 68வது நாடாக மியான்மர் இணைந்துள்ளது. (Myanmar joins International Solar Alliance becomes 68th Member of Grouping)
  2. விமானத்தில் வந்திறங்கும் பயணிகளின் சேவைகள் அடிப்படையில் பன்னாட்டு விமான நிலையங்கள் குழு, தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பெங்களுர் விமான நிலையம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி விமான நிலையம் 2வது இடமும், கனடாவின் டாரண்டோ விமான நிலையம் 3வது இடமும் பிடித்துள்ளது.
இந்திய நிகழ்வுகள்
  1. Public Affairs Centre எனப்படும் பொது விவகாரங்கள் மையம் வெளியிட்டுள்ள சிறந்த நிர்வாகங்களை மேற்கொள்ளும் மாநிலங்களின் பட்டியலில் தொடர்ந்து 3வது வருடமாக கேரளா முதலிடம் பிடித்துள்ளது. தமிழகம் 2வது இடம் பிடித்துள்ளது, பீகார் மாநிலம் இந்த பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
  2. GSTசட்டத்தின் கீழ் மேல் முறையீடு செய்வதற்கான தேசிய அளவிலான மேல் முறையீட்டு தீர்ப்பாயம் தமிழகத்தில் சென்னையில் அமைக்கப்படவுள்ளது.
  3. தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் ஜுலை 23 முதல் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்துள்ளது.
  4. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் டெம்பல் ஜுவல்லரி எனப்படும் கோவில் ஆபரணத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
  5. தமிழகத்தில் முதன் முறையாக பாதாள கழிவுகளை சுத்தம் செய்ய தானியங்கி இயந்திரம்(ரோபோ) பயன்படுத்தும் முதல் நகராட்சி என்னும் பெருமையை கும்பகோணம் நகராட்சி பெற்றுள்ளது.
வர்த்தக நிகழ்வுகள் 
  1. 28வது ஜி.எஸ்.டி (GST) கவுன்சில் கூட்டம் நிதியமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சானட்டரி நாப்கின், மார்பிள், கல் மற்றும் மரச் சிலைகள், செறிவூட்டிய பால் போன்றவற்றிற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. கின்ஷான் ஏவுகணை - சுமார் 3000 கி.மீ தூரம் பாய்ந்து துல்லியமாக இலக்கைத் தாக்கும் திறன் கொண்ட கின்ஷான் ஏவுகணையை ரஷ்ய நாடானது வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
விளையாட்டு நிகழ்வுகள்
  1. இந்தோனேஷியாவின் ஜகந்தா நகரில் நடைபெற்ற 19 வயது உட்பட்டோருக்கான ஆசிய ஜுனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் லக்ஷயா சென் ஜுனியர் உலக சாம்பியனான குன்லாட் விடிட்ஸ்ரனுவை (தாய்லாந்து) வென்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
  2. சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற ஸ்டாட் ஓபன் டபுள்யு.டி.ஏ டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், பிரான்ஸ் வீராங்கனை ஆலிஸ் கார்னெட் சாம்பியன் பட்டம் வென்றார்.
  3. இந்தோனேசியா தலைநகர் ஜாகர்தாவில் நேற்று நடந்த பைனலில் , ஆசிய ஜூனியர் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்‌ஷ்யா சென் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
  4. ஜூனியர் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியா 8 பதக்கங்களை வென்றது.2 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்கள் இதில்
  5. அடங்கும். சச்சின் ரத்தி 74 கிலோ எடை பிரிவில் கொண்ட தங்கம் வென்றார்.தீபக் பூனியா 86 கிலோ பிரிவில் தங்கம் வென்றது. 189 புள்ளிகளுடன் ஈரான் சாம்பியன்ஷிப்பில் முதலிடத்தை பிடித்தது. இந்தியா 173 புள்ளிகளையும் உஸ்பெகிஸ்தான் 128 புள்ளிகளையும் பெற்றது.
  6. ஜெர்மனி பார்முலா1 கார்பந்தயயத்தில் 11 சுற்று முடிவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான வாய்ப்பில் ஹாமில்டன் 188 புள்ளிகளுடன் முதலிடத்திலும், செபாஸ்டியன் வெட்டல் 171 புள்ளிகளுடன் 2–வது இடத்திலும் உள்ளனர்.
முக்கிய தினங்கள்
  1. சுப்பிரமணிய சிவா நினைவு தினம் - ஜுலை 23
Post a Comment