Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 20th July 2018

உலக செய்திகள்
 1. பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது . அதில், பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையில் மண்டல அளவில் விமானப் போக்குவரத்து தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது
 2. Travel + Leisure யின் படி உலகின் 15 சிறந்த நகரங்களில் பட்டியலில் உதய்பூரின் பாரம்பரிய நகரம் மூன்றாவது இடத்தில் உள்ளது. பட்டியலில் முதல் இரண்டு நகரங்கள் மெக்ஸிகோவின் சான் மிஜுவல் டி அலெண்டே மற்றும் ஓக்ஸாகா ஆகியவை ஆகும் .
 3. ஐ.நா மனித உரிமைகள் சபையிலிருந்து அமெரிக்கா வெளியேறுவதை அடுத்து அதன் பணியை தொடர்வதற்காக ஐஸ்லாந்தினை N General Assembly தேர்வு செய்துள்ளது.
இந்திய செய்திகள்
 1. சத்தீஸ்கர் மாநில முதல்வர் ராமன் சிங் ஆன்லைன் ஓய்வூதிய மேலாண்மை அமைப்பு (Online Pension Management System (OPMS)) மூலம் bhar Aapki Sewa Ka app ஐ அறிவித்தார்.
 2. அதிநவீன பால் பதனிடும் தொழிற்சாலை தமிழக அரசு சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூரில்
 3. திறந்து வைக்கப்பட்டுள்ளது.
 4. மும்பையில் உள்ள மேற்கு இரயில்வேயின் கீழ் வரும் எல்பின்ஸ்டன் ரோடு இரயில் நிலையத்தின் (Elphinstone Rood station) பெயர் ‘பிரபாதேவி இரயில் நிலையம்’ (Prabhadevi station)என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வர்த்தக செய்திகள்
 1. ‘கிஷான் மேலா-கூட்டம்’ – SBI வங்கியானது கர்நாடகா மாநிலத்தில் உள்ள விவசாயிகளுடன் அவர்களது விவசாய கடனை தீர்ப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் ‘கிஷான் மேலா’ என்ற பெயரில் புதிதாக தொடங்கியுள்ளது
விளையாட்டு செய்திகள்
 1. 2018 ஜூனியர் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியா 1 வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றதுள்ளது. women’s 68 Kg பிரிவில் திவ்யா ககரான் வெள்ளி வென்றார்.ரீனா women’s 55 Kg பிரிவிலும் மற்றும் கருணா women’s 76 kg பிரிவிலும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர் .
 2. பிரபலமான டென்னிஸ் வீரர்களை கெளரவப்படுத்தும் வகையில் அவர்களது பெயர்கள் ஏடிபி டென்னிஸ் ஹால் ஆப் பேமில் இடம் பெற்று வருகின்றன.மகளிர் இரட்டையர் பிரிவில் 14 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஹெலனா சுகோவாவின் (53) பெயரும் ஹால் ஆப் பேமில் இடம்பெற்றுள்ளது. அவர் 9 முறை கிராண்ட்ஸ்லாம் இரட்டையர் பிரிவிலும், 5 முறை கலப்பு இரட்டையர் பிரிவிலும் பட்டங்களை வென்றுள்ளார்.
 3. விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் நடுவராக பங்கேற்கும் மிகவும் இளம் வயது (23வயது) இந்திய நடுவர் என்ற பெருமையை ‘சகார் காஷ்யப்’(Sagar Kashyap) பெற்றுள்ளார்.
 4. செக் குடியரசின் மில்சேன் நகரில் நடைபெற்ற 28வது சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா 11 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கல பதக்கத்துடன் சாதனை படைத்துள்ளது. மேலும் இந்தப் போட்டியில் இந்தியாவின் மனுபாக்கர் 4 தங்கம் பெற்றுள்ளார்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
 1. அமெரிக்காவின் டெக்சாஸ் மகாணத்தில் இருந்து ‘ப்ளு ஆரிஜின்’ என்னும் இராக்கெட், விண்வெளிக்கு சுற்றுலா செல்வதற்காக அமேசான் நிறுவனத்தால் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இரங்கல்
 1. புகழ்பெற்ற கவிஞரான கோபால் டஸ் நீராஜ் டெல்லியில் காலமானார்
முக்கிய தினங்கள்
 1. ஜுலை 18 - சர்வதேச மண்டேலா தினம்

No comments: