Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 11th August 2018

உலக செய்திகள்
  1. சிக்கிம் மாநிலத்தில் உள்ள ‘கஞ்சன்சுங்கா உயிர்கோளக் காப்பகம்’(Khangchendzonga Biosphere Reserve) UNESCO-வின் உலக உயிர்கோளக் காப்பக வலையமைப்பில் (WNBR – World Network of Biosphere Reserve) சேர்க்கப்பட்டுள்ளது.
  2. உலகின் மிகப் பெரிய பறவை சிற்பம் (World’s Largest Bird Sculpture) கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சத்திய மங்கலத்தில் உள்ள ஜடாயு தேசிய பூங்காவில் அமைக்கப்படவுள்ளது
தேசிய செய்திகள்
  1. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம், ஏலம் எடுப்போருக்கான தகவல் மேலாண்மை அமைப்பை தொடங்கியுள்ளது.
  2. இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பு (FIEO – Federation Of Indian Export Organization) உருவாக்கிய நிர்யாத் மத்ரா மொபைல் செயலியை மத்திய வணிகத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு வெளியிட்டுள்ளார்.
  3. மாநிலங்களவை துணைத் தலைவராக தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஷ் நாராயணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் சைபிரியாவில் விழுந்த விண்கல்லில் (Meteorites) இருந்து Uakitite என்ற புதிய தாதுப் பொருளைக் கண்டறிந்துள்ளனர்.
  2. Xingkong-2 – ஒலியின் வேகத்தை விட 5 மடங்கு வேகமாக செல்லக்கூடிய (Hypersonic wave Rider) சீனாவின முதல் விமானமான ‘Xing kong-2 வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் ‘அபினவ் பிந்த்ரா’ சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் (IOA) வீரர்கள் குழுவின் உறுப்பினராக (Athletes Commission) நியமிக்கப்பட்டுள்ளார்.