Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 14th August 2018

உலக செய்திகள்
 1. வரலாற்றை மாற்றியமைத்த பெண்கள் பட்டியலில் மேரி கியூரி முதல் இடத்திலும், மதர் தெரேசா 20 வது இடத்திலும் உள்ளனர்
 2. காகத்யா என்ற திட்டத்தின் தாக்கம் குறித்து ஆராய்வை மேற்கொள்ள தெலுங்கானா மாநிலம் மித வெப்ப மண்டல பகுதிகளுக்கான சர்வதேச ஆராய்ச்சி பயிர்கள் நிறுவனத்துடன் (ICRISAT – International Crops Research Institute for the Semi – Arid Tropics) புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
 3. இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை போக்குவரத்து நிறுவனமான இரயில்வேயின் வரலாற்றை அனைவருக்கும் தெரிவிக்கும் நோக்கில் 72வது சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15) முதல், கோவை, ஈரோடு, டெல்லி உள்பட 22 இரயில் நிலையங்களில் டிஜிட்டல் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது.
தேசிய செய்திகள்
 1. ராஜ்நாத் சிங் NDMC ஸ்மார்ட் சிட்டி திட்டங்களைத் புது டெல்லி மாநகரத்தில் தொடங்குகி வைத்தார்
 2. இந்தியா 2 வது லுனார் மிஷன் ‘சந்திரயான் -2′வை துவக்க உள்ளது.
 3. டாக்டர் மகேஷ் ஷர்மா கலாசார அமைச்சர் (Minister of state for Culture),இந்திரா காந்தி நேஷனல் சென்டர் ஃபார் தி ஆர்ட்ஸ்(Indira Gandhi National Centre for the Arts) – புது தில்லியில் ‘Jewellery’– டாக்டர் குலாப் கோத்தாரி, ‘Ghats of Banaras’– டாக்டர் சச்சினந்த் ஜோஷி மற்றும் ‘Untold Story of Broadcasting’– டாக்டர் கௌதம் சாட்டர்ஜி, ஆகிய 3 புத்தகங்களை வெளியிட்டார்.
 4. முதன் முறையாக இந்தியாவில் மூன்று நீர் விமான தளங்களை(water Aerodromes) நிறுவ மத்திய விமானத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
 5. ஒரே நாடு ஒரே தேர்தல் சரியான கோட்பாடு. ஆனால் வரும் பொதுத் தேர்தலில் அதை நடைமுறைபடுத்த முடியாது என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இன்று தெரிவித்தார்.
வர்த்தக செய்திகள்
 1. அலகாபாத் வங்கியின் மேலாண் இயக்குநர் உஷாவை அந்தப் பதவியில் இருந்து மத்திய அரசு நீக்கியுள்ளது.
 2. இந்திய வங்கித்துறை வளர்ச்சி எதிர்மறையாக இருக்கும் என பிட்ச் ரேட்டிங்ஸ் அமைப்பு கணித்துள்ளது.
 3. கோட்டக் வெல்த் ஹாருன்-2018-ல் அதிபணக்காரப் பெண்கள் பட்டியலில் சுமார் ரூ.37,570 கோடி மதிப்புள்ள சொத்துடன் கோத்ரெஜ் குழுமத்தின் ஸ்மிதா வி.கிரிஷ்ணா முதலிட வகிக்கிறார்.
 4. சமையில் எண்ணெயை சேரித்தல் அதனை பயோடீசலாக மாற்றும், RUCO (Repurpose Used Cooking Oil) (பயன்படுத்திய சமையல் எண்ணெய்) என்னும் முன்மாதிரி திட்டத்தை உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI – Food Safety and Standards Authority of India) துவக்கியுள்ளது.
விளையாட்டு செய்திகள்
 1. ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் சிமோனா ஹாலெப் ‘சாம்பியன்’ பட்டம் வென்றார்
 2. Asian Tour தலைப்பை இந்திய கோல்ப் வீரர் விராஜ் மடப்பா வென்றார்.
 3. ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் சிட்சிபாஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ரபெல் நடால்
 4. ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்திடம் விராட் கோலி முதலிடத்தை இழந்தார்.
இரங்கல்
 1. சத்தீஸ்கர் மாநில ஆளுநர் பல்ராம்ஜி தாஸ் டான்டன் காலமானர்.

No comments:

Post a Comment