Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 19th August 2018

உலக செய்திகள்
  1. 11வது உலக ஹிந்தி மாநாடு மொரிஸியஸில் உள்ள போர்ட் லூயிஸில் நடைபெற்றது
  2. 2018-ம் ஆண்டிற்கான சர்வதேச ரோபோ கண்காட்சி சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்றது.
  3. இந்திய ரிசர்வ வங்கியால் நடத்தப்பட்ட 2016-2017ம் ஆண்டுக்கான உள்நாட்டு பணம் அனுப்புதலுக்கான கணக்கெடுப்பில் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) முதலிடத்தில் உள்ளது.
  4. ஏரோ ஜெல் (Aerogel) – அறிவியலாளர்கள், பீர் தயாரிப்பின் போது வரும் கழிவுப் பொருட்களிலிருந்து அதிக வெப்ப ஏற்புத் திறனுடைய ஒளி ஊடுருவக் கூடிய, மீத்திறன் காப்பு கூழ்மமான (Super Insulating transparent gel) ஏரோஜெல்-லை (Aerogel) உருவாக்கியுள்ளனர்.
தேசிய செய்திகள்
  1. இஸ்ரோவின் ராக்கெட்களை ஏவுவதற்காக 3-வது புதிய ராக்கெட் ஏவுதளத்தை தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப் பட்டினத்தில் அமைக்க உள்ளது
  2. 72வது இந்திய சுதந்திர தினத்தை யொட்டி, “சுதந்திரப் போராட்டம் மற்றும் சுதந்திர போராளிகள்” (freedom struggle and freedom fighters) என்ற தலைப்பில் சிறப்புத் திரைப்பட விழா (special film festival) மும்பையில் நடைபெற்றது.
  3. முழுநேர விண்வெளி தொழில்நுட்ப ஆராய்ச்சி மையமானது வட இந்தியாவில் முதன் முறையாக ஜம்மு நகரில் அமைக்கப்படவுள்ளது. இது ஆராய்ச்சி கல்வி மற்றும் முதுகலை பட்டப் படிப்புகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
  4. மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (Central pollution control Board) தனது காற்றுத் தர குறியீட்டு (Air quality Index) பட்டியலை வெளியிட்டது. இதில் 62 நகரங்களில் ஹரியானா மாநிலத்தில் குருகிராம் நகரினை இந்தியாவின் அதிக மாசுபட்ட நகரமாக அறிவித்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில் 2018ஆம் ஆண்டின் உலக சாம்பியன் பட்டம் பெற்ற பிரான்ஸ் அணி முதல் இடத்தைப் பிடித்துள்ளது. பெல்ஜியம் இரண்டாவது இடத்தையும், பிரேசில் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. இந்திய அணி 96-வது இடம் பிடித்துள்ளது.
முக்கிய தினங்கள்
  1. ஆகஸ்ட் 19 - உலக மனித நேய தினம் (World Humanitarian Day)

Post a Comment