Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 30th August 2018

உலக செய்திகள்
  1. வங்கக்கடலை சுற்றி அமைந்துள்ள நாடுகளின் பொருளாதார ரீதியான ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில், பிம்ஸ்டெக்(BIMSTEC) அமைப்பின் 4வது உச்சி மாநாடு நோபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் நடைபெறுகிறது.
  2. கீகோ – ரோபோ பள்ளிகளில் குழந்தைகளுக்கு பாடம் நடத்துவதற்காக பல்வேறு தொழில்நுட்ப வசதியுடன் கூடிய சிறியவகை ரோபோவை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.
தேசிய செய்திகள்
  1. தமிழகத்தில் முதல் முறையாக, ஹலிகேம் எனப்படும் ஆளில்லா விமானம் மூலம் காட்டு யானைகளை கண்காணிக்கும் பணி கோவை மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
  2. ஒடிஷாவின் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளின் சமூக மாற்றத்திற்கு வழிவகுக்கும் முன்மாதிரியான படைப்புகளை அங்கீகரிப்பதற்காக ‘மு ஹீரோ மு ஒடிஷா’(I am hero, I am Odisha) என்ற பிரச்சாரத்தை ஒடிஷா மாநில அரசு தொடங்கியுள்ளது.
  3. 21-ம் நூற்றாண்டின் சவால்களை கையாளுவதற்கு மாணவர்களுக்கு திறன் அளிப்பதற்காக சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் தொழில் முனைவோர் பிரிவு(E-Cell – Entrepreneur-cell) ‘E-21’என்ற பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.
  4. FAME இந்தியா – II – மின் வாகனங்களை அதிக அளவில் உற்பத்தி செய்வதற்காக சலுகை அளிக்கும் FAME இந்தியா – II திட்டத்தை செப்டம்பர் 7 அன்று, புது டெல்லியில் நடக்கும் உலக இயக்க மாநாடான ‘மூவ்’ மாநாட்டின் தொடக்க அமர்வின் போது இத்திட்டம் தொடங்கப்பட இருக்கிறது
  5. புவி அறிவியல் அமைச்சகத்தினால் ஒரே குடையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டமான O-SMART (‘Ocean Services, Technology, Observations, Resources Modelling and Science) திட்டத்திற்கு, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
  6. டெல்லியில் நடந்த Google for India-வின் நான்காவது பதிப்பில், இந்திய வட்டார செய்தி வெளியீட்டாளர்கள் ஆன்லைனில் அவர்களின் உள்ளடக்கத்தை வெளியிட உதவுவதற்காக “ப்ராஜெக்ட் நாவலேகா”(Navlekha) எனும் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.
வங்கி செய்திகள்
  1. சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் புதிய மேம்பாட்டு வங்கிக்கு (என்டிபி) ஏஏ பிளஸ் தரச்சான்று வழங்கப் பட்டுள்ளது.
  2. நடப்பு நிதியாண்டில், ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7.4 சதவீதமாக வளர்ச்சி காணும் என, ரிசர்வ் வங்கி மதிப்பிட்டு உள்ளது. இது, கடந்த நிதியாண்டில், 6.7 சதவீதமாக இருந்தது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. கூகுள் கோ செயலி – பார்க்கும் மற்றும் வாசிக்கும் திறனற்றவர்களுக்கும் இணையப் பக்கத்தை பயன்படுத்தும் விதமாக கூகுள் நிறுவனம் கூகுள் கோ என்ற செயலியில், இணையப் பக்கங்களை 28 மொழிகளில் வாசிக்கும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. ஜகார்தாவில் 18-வது ஆசிய விளையாட்டுப்போட்டிகள் நடந்து வருகின்றன. இன்று நடந்த ஆடவருக்கான டிரிபிள் ஜம்ப் தடகளப் போட்டியில், இந்திய வீரர் (Arpinder Singh) அர்பிந்தர் சிங் 77 மீட்டர் தொலைவு தாண்டி தங்கப் பதக்கத்தை வென்றார்.
  2. ஹெப்லதான் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை எனும் பெருமையை ஸ்வப்னா பர்மான்(Swapna Barman) பெற்று புதிய வரலாறு படைத்துள்ளார்.
  3. ஆசிய விளையாட்டு போட்டியின் டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு அரை இறுதியில் தோற்ற இந்திய அணி வெண்கலப் பதக்கம் பெற்றது.
Post a Comment