Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 6th August 2018

தேசிய செய்திகள்
 1. IMPRINT-2 திட்டத்தின் கீழ் 122 புதிய ஆராய்ச்சி திட்டங்களுக்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது
 2. தேசிய செயல்முறை சார் மற்றும் பொருளாதார குழுவின் ஆய்வறிக்கையின் படி(NCAER – National Council of Applied Economic Research) அதிக முதலீடுகளை ஈர்க்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 6வது இடத்திலிருந்து 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
 3. முக்கிய மந்திரி கிஷான் ஆயே பதோத்திரி சோலார் யோஜனா(Mukeyamantri Kisan Aaye badhotri solar yojana) - டெல்லி யூனியன் பிரதேச அரசானது தங்கள் யூனியன் பிரதேசத்தில் உள்ள விவசாயிகளின் நிலத்தில் மூன்றில் ஒரு பங்கில் சூரிய ஒளி மின் தகடு அமைத்து மின்சாரம் உற்பத்தி செய்து தங்கள் வருமானத்தை பெருக்கிக் கொள்வதற்காக தொடங்கியுள்ளது.
 4. சுற்றுச் சூழல் தகவலமைப்பை பாதுகாப்பதற்கான முதல் தும்பிகளுக்கான திருவிழா(First – ever dragonfly Festival) டெல்லியில் நடைபெற உள்ளது.
 5. இந்தி சாகித்ய அகாதெமியின் உயரிய விருதான ஷலக்கா சம்மன் விருது (Shalaka Samman Awears) இந்தி கவிஞர் ‘ஜாகித் அக்தருக்கு’ வழங்கப்பட்டுள்ளது.
 6. ராஷ்மி ரோபோ - உலகில் முதன் முதலாக இந்தி பேசும் ரோபோ ராஷ்மி, இந்தியாவின் இராஞ்சியைச் சேர்ந்த ‘ரஞ்சித் ஸ்ரீ வாட்சா’ என்பவரால் உருவாக்கப்பட்டுள்ளது
உலக செய்திகள்
 1. நகர்புற மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகளில் நிதி, தொழில்நுட்ப ரீதியிலான ஒத்துழைப்பு வலுப்படுத்துவது தொடர்பாக இந்தியா, ஜெர்மனி இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
 2. பாகிஸ்தான் பாதுகாப்பு விவகாரங்களுக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் $750 மில்லியன் டாலர் நிதியுதவியை குறைத்து $150 மில்லியன் டாலராக அளிப்பதற்கான தேசிய பாதுகாப்பு அதிகாரமளித்தல் சட்டம் 2019 (National Defense Authorisation Act - 2019)அமெரிக்க பாராளுமன்றம் நிறைவேற்ற உள்ளது.
 3. மலேசியாவில் உள்ள ஆசிய – பசுபிக் பிராந்திய ஒளிப்பரப்புதல் மேம்பாட்டு நிறுவனத்தின் (AIBD) தலைமை பொறுப்பிற்காக ‘இந்தியா’ இரண்டு ஆண்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
 4. உலகிலேயே அமைதியான நாடுகளின் பட்டியலில் மொத்தம் 163 நாடுகளில் இந்தியா 137வது இடம் பிடித்துள்ளது. (World Peace Index – 2018 – India 137th rant)
 5. ழ முதலிடத்தை ஜஸ்லாந்து தக்க வைத்துள்ளது. இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் முறையே நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரியா பெற்றுள்ளது. கடைசி இடத்தில் தெற்கு சூடான் உள்ளது.
வங்கி செய்திகள்
 1. சேமிப்பு கணக்கில் ‘மினிமம் பேலன்ஸ்‘ இல்லாதவர்களிடமிருந்து வங்கிகள் வரி வசூலிப்பு. இதில் எஸ்பிஐ(SBI) முதலிடம்
நியமனங்கள்
 1. இந்தியாவில் முதன் முறையாக ஜம்மு – காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக ‘கீதா மிட்டல்’(Gita - Mittal) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
 2. மாநிலங்களவை துணைத் தலைவர்கள் குழுவின் முதல் பெண் மாநிலங்களவை துணைத் தலைவராக ‘கஹகஷான் பர்வீன்’ என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
விளையாட்டு செய்திகள்
 1. எப்ஐஎம் ஆசிய ரோட் ரேஸிங் மோட்டார் சாம்பியன்ஷிப் போட்டி யில் 4-வது சுற்றில் ஆஸ்திரேலிய வீரர் அந்தோணி வெஸ்ட் வெற்றி கண்டார்.
 2. பிஜி சர்வதேச கோல்ப் தொடரில் ஆஸ்திரேலியாவின் அந்தோனி குவாயிலை வீழ்த்தி இந்திய வீரர் ககன்ஜீத் புல்லார் சாம்பியன் பட்டம் வென்றார்.
 3. சீனாவில் நடைபெற்ற உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், ஸ்பெயின் வீராங்கனை கரோலிமான் மரின் இந்தியாவின் பி.வி.சிந்துவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். தொடர்ந்து 2வது ஆண்டாக சிந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
 4. 2018 ம் ஆண்டு மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில், உலக சாம்பியன் பட்டத்தை எட்டாவது தடவையாக நெதர்லாந் வென்றுள்ளது.
 5. இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் தேத்ரியின் 34-வது பிறந்த நாளையொட்டி அவரை கால்பந்து விளையாட்டிற்கான ஆசியாவின் சின்னமாக (AFC) ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (யுகுஊ) அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment