Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 14th September 2018

உலக செய்திகள்
  1. தற்போது நடைமுறையில் இருக்கும் இரயில்வே பிரிவின் மின் இணைப்பை புனரமைப்பது தொடர்பான 3 திட்டங்களை இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகள் கூட்டாக தொடங்கி உள்ளன.
  2. புளோரன்ஸ் புயல் அமெரிக்காவின் வட பகுதியான கரோலரை விர்ஜீனியா போன்ற பகுதியில் ஃபுளோரன்ஸ் புயல் தாக்கியுள்ளது.
  3. இந்தியா – ரஷ்யா ஆகிய இருநாடுகளுக்கிடையே அமைதி, நட்பு, இணைந்து செயலாற்றுதல் மற்றும் புரிதல் ஆகியவற்றிற்காக பாடுபட்டவர்களுக்கு “ரஷியா நாடு” வழங்கும் உயரிய விருதான “நட்புறவு விருது இந்திய செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
  4. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா நகரில் நடைபெற்ற 40வது ஆசியா – பசுபிக் டென்டல் ஃபெடரேஷன் மாநாட்டில் இந்திய மருத்துவ பேராசிரியர் பாலாஜி என்பவருக்கு பாகிஸ்தான் பல் மருத்துவ சங்கம் மிக உயரிய மனிதநேய விருது வழங்கி கௌரவித்துள்ளது.
தேசிய செய்திகள்
  1. உச்ச நீதிமன்றத்தின் 46வது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் நியமிக்கப்பட்டுள்ளார்.
  2. விண்வெளி ஆய்வு, அறிவியல் மற்றும் பயன்பாடு குறித்த இந்தியா – புருனே இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது
  3. சத்தீஸ்கரில் 13 சுற்றுலா தளங்களை இணைக்கும் நாட்டின் முதல் பழங்குடி வட்டார திட்டத்தை, மத்திய அமைச்சர் கே. ஜே. அல்போன்ஸ் துவக்கிவைத்தார் .இந்த திட்டம் சுற்றுலா அமைச்சகத்தால் ரூ. 21 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது .
  4. மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளைக் குறிக்க பிரதமர் நரேந்திர மோடி ‘ஸ்வச்சாத ஹீ சேவா இயக்கம்‘ அறிமுகப்படுத்தப்பட்டது.
  5. சுகாதாரம், வேளாண்மை மற்றும் திறன்சார் போக்குவரத்து ஆகிய துறையில் ஏற்படும் சவால்களை தீர்க்கும் நோக்கில், NITI ஆயோக், இன்டெல் (Intel) மற்றும் டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் (TIFR) ஆகியவை இணைந்து அமைத்துள்ள சர்வதேச செயற்கை நுண்ணறிவு உருமாற்றி மாதிரி மையம் (Model International Center for Transformative Artificial Intelligence) பெங்களுரில் அமைய உள்ளது.
  6. சுற்றுலா துறையில் உள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா மற்றும் மால்டா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
விளையாட்டு செய்திகள்
  1. ஜூனியர் ஆண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பந்தயத்தில் 16 வயதான இந்திய வீரர் உதய்வீர் சித்து 587 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.
  2. 25 மீட்டர் பிஸ்டல் ஜூனியர் அணிகள் பிரிவில் உதய்வீர் சித்து, விஜய்வீர் சித்து, ராஜ்கன்வார் சிங் சந்து ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1,736 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.
Post a Comment