Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 15th Septemver 2018

உலக செய்திகள்
  1. தென் கொரியா அதன் முதல் ஏவுகணைத் திறன் கொண்ட டோசன் ஆன்சோங் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை அறிமுகப்படுத்தியது.
  2. ஆரோக்கியமான வாழ்க்கை, கல்வியறிவு, வாழ்க்கை தரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஐ.நா மனிதவள மேம்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள ஐ.நா. மனிதவள மேம்பாட்டு குறியீட்டு தரவரிசைப் பட்டியல் 2017ல் இந்தியா 189 நாடுகளில் 130வது இடம் பிடித்துள்ளது. இப்பட்டியலில் நார்வே முதலிடம் பிடித்துள்ளது.
தேசிய செய்திகள்  
  1. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு சட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக(MGNREGA – Mahatma Gandhi National Rural Employment Guarantee Act) மத்திய அரசிடமிருந்து தமிழக அரசு 5 விருதுகளைப் பெற்றுள்ளது.
  2. 2018ம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ளவாறு விவசாயிகள் தங்கள் உற்பத்திக்கு ஏற்ற விலையை உறுதி செய்வதற்காக ‘பிரதான் மந்திரி அன்னதாதா அய் சன்ராக்சன் அபியான்(PM-AASHA – Pradhan Mantri Annadata Aay Sanrakshan Abhiyan)என்ற புதிய தலைமைத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி உள்ளது.
  3. சிறு விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்ததை நியாயமான விலையில் விற்பனை செய்வதற்கு, ஆந்திரப் பிரதேச மாநில அரசானது ‘மின்னணு – ரைத்து’ என்னும் கைப்பேசி தளத்தை தொடங்கியுள்ளது.
  4. கோவா மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமானது கடலோர பகுதிகளில் இடர்பாடுகளிலுள்ள பெண்களுக்காக உலகளாவிய உதவியளிக்கும் சேவை எண்ணை(181) தொடங்கி உள்ளது.
  5. விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பு மீதான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியா மற்றும் எகிப்து நாடுகளுக்கிடையே கையெழுத்தாக உள்ளது.
வர்த்தக செய்திகள்
  1. உலகின் தலைசிறந்த பொருளாதார மையம் என்ற பெருமையை லண்டன் நகரத்திடம் இருந்து நியூயார்க் பறித்துள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி சி-42 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான பணிகளை கடந்த சில மாதங்களாக செய்து வந்தது.
விளையாட்டு செய்திகள்
  1. இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜீலன் கோஸ்வாமி சர்வதேச போட்டியில் 300 விக்கெட் கைப்பற்றிய முதல் வீரங்கனை என்ற பெருமையை பெற்றார்.
முக்கிய தினம்
  1. மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த நாள் செப்டம்பர் 15 ம் தேதி பொறியாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.
  2. ஜனநாயகத்தின் சர்வதேச தினம்(The International Day of Democracy) உலகளாவிய அளவில் செப்டம்பர் 15 அன்று அனுசரிக்கப்படுகிறது.
Post a Comment