Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 16th September 2018

உலக செய்திகள்
  1. சாகர்மாதா தோழமை – 2 (Sagarmatha friendship – 2) – நேபாளம் மற்றும் சீனா நாடுகளுக்கிடையேயான பேரிடர் மேலாண்மை. தீவிரவாதிகளை ஒழித்தல் போன்றவற்றை நோக்கங்களாகக் கொண்ட கூட்டு இராணுவப் பயிற்சிஇ சீனாவின் தென்மேற்கு சிசூவான் மகாணத்தின் தலைநகர் செங்டு (Chengdu) – வில் செப்டம்பர் 17 அன்று நடைபெற உள்ளது
  2. சந்திரனுக்கு சுற்றுலா பயணிகளை முதன்முதலாக அழைத்துச் செல்லும் அமெரிக்காவின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ என்னும் திட்டத்தின் கீழ் “பிக் பால்கன்” என்ற மிகப்பெரிய இராக்கெட் தயாரிக்கப்பட்டுள்ளது
  3. நீடித்த வளர்ச்சி இலக்குகள் மற்றும் தொற்றா நோய்களை தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதலில் சிறப்பான பங்காற்றியதற்காக புகழ்பெற்ற ஐ.நா. நிறுவனங்களுக்கிடையேயான பணிக்குழு விருது (UNIATF – UN Interagency Task Force) மனோஜ் ஜலானிக்கு வழங்கப்பட்டுள்ளது.
தேசிய செய்திகள்
  1. 13 சுற்றுலா தளங்களை இணைக்கும் நாட்டின் முதல் “பழங்குடிகள் சுற்றுப் பாதைத் திட்டத்தை” மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் சத்தீஸ்கரில் தொடங்கி வைத்தார்.
  2. தேசிய கல்வி உதவித் தொகை வாயில் (NSP – National Scholarship Portal) மற்றும் கைபேசி செயலியை மத்திய சிறுபான்மை அமைச்சகம் வெளியிட்டுள்ளது
  3. ஜார்கண்ட் மாநில அரசானது அலுவலகப் பயன்பாட்டிற்காக மின்வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசாங்கப் பயன்பாட்டிற்காகச் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்களை கொள்முதல் செய்யும் இந்தியாவின் ஐந்தாவது மாநிலமாகவும் கிழக்கிந்தியாவின் முதலாவது மாநிலமாகவும் ஜார்கண்ட் உருவெடுத்துள்ளது
  4. உறுப்பினர்களின் தவறான நபாராளுமன்றத்தை தெடர்பான புகார்கள் குறித்து ஆய்வு செய்யும், மக்களவையில் நெறிமுறைகள் குழுத் தலைவராக எல்.கே.அத்வானி மீண்டும் லோக்சபா சபாநாயகரால் (சுமித்ரா மகாஜன்) நியமிக்கபட்டுள்ளார்
விளையாட்டு செய்திகள்
  1. விளையாட்டுகளில் வாழ்நாள் சாதனைப் படைத்தவர்களுக்கு வழங்கப்படும் தயான்சந்த் விருதுகள் மற்றும் கடந்த நான்கு ஆண்டுகளில் சிறப்பான மற்றும் தகுதி வாய்ந்த பணிக்காக பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் துரோணச்சாரியா விருதுகள் பெறுவோரை தேர்வு செய்வதற்காக “நீதிபதி முகல் முத்கல்”. தலைமையில் 11 பேர் கொண்ட தேர்வுக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.