Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 17th September 2018

உலக செய்திகள்
 1. சிங்கப்பூர் கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தில் மெர்சிடிஸ் அணி நட்சத்திர வீரர் லூயிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார்.
 2. இஸ்ரேல் நாட்டுக்கான இந்திய தூதராக டாக்டர் ரோன் மால்கா நியமிக்கப்பட்டுள்ளார்
 3. வாழ்வதற்கான சிறந்த நகரங்கள் பட்டியலை சமீபத்தில் குளோபல் மெட்ரோ மானிட்டர் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் முதல் பத்து நகரங்களில் ஆறாவது இடத்தில் இந்தியத் தலைநகரான டெல்லி உள்ளது. அயர்லாந்தின் டப்ளின் நகரம் முதலிடத்திலும், அமெரிக்காவின் சான்ஜோஸ் நகரம் 2-ம் இடத்திலும் உள்ளது.
 4. இந்திய அமெரிக்கரான விஞ்ஞானி மற்றும் பேராசிரியர் அருள் சின்ணையான் (Prof Arul Chinnaiyan), அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் நிறுவனத்தினால் வழங்கப்படும் “சிறந்த புலனாய்வாளர் விருது” (Outstanding Investigator Award) பெற்றுள்ளார்
தேசிய செய்திகள்
 1. வங்கிக் கணக்கு தொடங்கியவர்களுக்கு ரூபே டெபிட் கார்டும் ரூ. 1 லட்சத்துக்கான விபத்து காப்பீடும் வழங்கப்பட்டது. திட்டம் தொடங்கப்பட்டு 6 மாதங் களுக்குப் பிறகு ஓடி வசதி ரூ. 5 ஆயிரத்துக்கு வழங்கப்பட்டது. பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா திட்டம் 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது.
 2. நாட்டிலேயே முதன் முறையாக ஐம்மு – காஷ்மீர் எல்லைப் பகுதியில் லேசர் தொழில் நுட்பத்துடன் கூடிய வேலியை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது. இந்த லேசர் வேலி அமைப்போடு கண்காணிப்பு கேமராக்களும் அமைத்துள்ளது.
 3. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘இஸ்ரோ’வில் விஞ்ஞானியாக பணியாற்றியவர் நம்பி நாராயணன். இவர் 1994–ல் இஸ்ரோவின் விண்வெளி திட்டங்களை வெளி நாடுகளுக்கு பரிமாற்றம் செய்ததாக கூறி கேரள மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டு, ஆதாரம் இல்லாமல் சி.பி.ஐ அவரை விடுவித்தது.
 4. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘இஸ்ரோ’வில் விஞ்ஞானியாக பணியாற்றியவர் நம்பி நாராயணன். இவர் 1994–ல் இஸ்ரோவின் விண்வெளி திட்டங்களை வெளி நாடுகளுக்கு பரிமாற்றம் செய்ததாக கூறி கேரள மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டு, ஆதாரம் இல்லாமல் சி.பி.ஐ அவரை விடுவித்தது.
 5. ஒடிஷா மாநிலத்தில் “நாவாகை” (Nuakhai) என்னும் விவசாயத் திருவிழா தொடங்கியுள்ளது
 6. சத்தீஸ்கர் மாநிலத்தில் பஸ்தர் பகுதியில் உள்ள அபூஐகமத் பழங்குடிகள் பற்றிய ஆங்கில புத்தகம் “Bastar Dispatches A Passage Through the wilds” என்ற பெயரில் “நரேந்திரா” என்பவரால் எழுதி வெளியிடப்பட்டுள்ளது
விளையாட்டு செய்திகள்
 1. கென்யன் எலியட் கிபோகேவ் பேர்லினில் (ஜெர்மனி) ஒரு புதிய மராத்தான் உலக சாதனையை அமைத்தார்.
 2. போல்ந்து நாட்டில் உள்ள கிளிவிஸ் நகரில் மகளிருக்கான 13-வது சில்சியன் குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில் 48 கிலோ எடைப் பிரிவில் களமிறங்கிய இந்தியாவின் மேரி கோம் கஜகஸ்தானின் அகிரிம் கஸனாயேவாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.
 3. துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற அஹ்மத் கோமெர்ட் குத்துச்சண்டை தொடரில் மகளிருக்கான 64 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சிம்ரன்ஜித் கவுர் இறுதி சுற்றில் துருக்கியின் சீமா கலிஸ்கானை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.
 4. அகில இந்திய அளவிலான 92-வது எம்சிசி–முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வந்தது.
 5. தென்கொரியாவில் உள்ள சாங்வான் நகரில் நடைபெற்ற 52-வது உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் (52nd ISSF World Championship), இந்திய அணி 11 தங்கம், 9 வெள்ளி, 7 வெண்கல பதக்கத்துடன் மொத்தம் 27 பதக்கங்களுடன் மூன்றாம் இடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளது.
முக்கிய செய்திகள்
 1. சர்வதேச ஐனநாயக தினம் – செப்டம்பர்15

No comments: