Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 18th September 2018

உலக செய்திகள்
  1. உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் ஜெர்மனியில் ஓடத் தொடங்கியது. பிரான்சை சேர்ந்த ஆல்ஸ்டம் என்ற நிறுவனம் தயாரித்துள்ள ஹைட்ரஜன் ரயில் ஜெர்மனியின் வடக்குப் பகுதியில் உள்ள குசாவன் (Cuxhaven) நகரில் தனது பயணத்தை தொடங்கியது.
  2. இந்திய மற்றும் மால்டா இடையே 3 ஒப்பந்தங்கள் கையேழுத்தாகியுள்ளது. கடல்சார் பாதுகாப்பு, வெளிநாட்டு சேவை நிறுவனங்கள் மேம்பாடு, சுற்றுலா வளர்ச்சி ஆகிய துறைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பாக தனித்தனியே அந்த உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
தேசிய செய்திகள்
  1. காஷ்மீர் எல்லையில் ஊடுருவல்களை தடுத்து நிறுத்துவதற்காக அதிநவீன ஸ்மார்ட் வேலி திட்டப்பணிகளை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.
  2. தமிழ் கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் பிரான்ஸ் நாட்டிலும் , பிரான்ஸ் கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் தமிழகத்திலும் நடைபெறும் வண்ணம் தமிழ்நாடு – பிரான்ஸ் இடையே கலாசார ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  3. நாட்டில் புதிதாக நான்கு தேசிய வடிவமைப்பு நிறுவனங்கள் அமைப்பதற்காக நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன் National Institutes of Design (NID) சட்டத்திருத்த 2014 மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
வர்த்தக செய்திகள்
  1. பாங்க் ஆப் பரோடா, விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி ஆகிய மூன்று பொதுத்துறை வங்கிகளையும் ஒருங்கிணைக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. பிரிட்டன் நிறுவனத்துக்குச் சொந்தமான இரண்டு செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.- சி42 ராக்கெட் ஸ்ரீஹாரிகோட்டா சதீஷ் தவன் விண்வெளி ஆராய்ச்சி மைய முதல் ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
விளையாட்டு செய்திகள்
  1. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, பளு தூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு ஆகியோரது பெயர்கள் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இரங்கல்
  1. சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி அன்னா ராஜம் மல்ஹோத்ரா மும்பையில் காலமானார்.