உலக செய்திகள்
- நிலையான மற்றும் உலகளாவிய அளவில் அணுகக்கூடிய சுற்றுலாத் தன்மையை மேம்படுத்துதலை பணியாகக் கொண்ட UNWTO -இன் (United Nations World Tourism Organization) 7-வது உலகளாவிய நகர்புற சுற்றுலா உச்சி மாநாடு தென்கொரியாவின் தலைநகரான சியோலில் நடைபெற்றது.
- ஜப்பான் ஆளுங்கட்சி தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஷன்சோ அபே மூன்றாவது முறையாக அந்நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தேசிய செய்திகள்
- இந்தியாவின் உள்நாட்டியிலேயே தயாரிக்கப்பட்ட, நிலத்தில் இருந்து ஏவப்படும் குறைந்த தூர தாக்குதல் ஏவுகணை ‘பிரஹார்‘ ஒடிசா கடற்கரையிலிருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
- பாலியல் குற்றவாளிகள் பற்றிய தேசிய தரவுத்தளத்தை (NDSO -NATIONAL DATABASE ON SEXUAL OFFENDERS ) மத்திய உள்துறை அமைச்சகம், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் (WCD) உடன் இணைந்து வெளியிட்டுள்ளது.
- ரஷ்ய கூட்டமைப்பின் விமானப்படை மற்றும் இந்திய விமானப்படைக்கு இடையேயான கூட்டு விமான போர் பயிற்சி “அவியாந்திரா -18″ (“Aviaindra-18”) ரஷ்யாவின் லிபட்ஸ்க் நகரில் தொடங்கியுள்ளது.
- ஸ்வச் – தாரா(Swatch Dhara) : ஆந்திர பிரதேசம் மாநிலம் முழுவதும் தூய குடிநீரை வழங்கும் நோக்கத்துடன் அம்மாநில அரசானது Swatch – Dhara (ஸ்வச் – தாரா) என்னும் திட்டத்தை தொடங்கியுள்ளது.
விளையாட்டு செய்திகள்
- 2018 ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. உயரிய விருதாக கருதப்படும் கேல் ரத்னா விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லியும், பளு தூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இரங்கல்
- வியட்நாம் அதிபர் டிரான் டாய் குவாங் உடல் நலக் குறைவால் மரணம் அடைந்தார்.
முக்கிய தினம்
- செப்டம்பர் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் சமாதானத்தின் சர்வதேச தினம் அனுசரிக்கப்படுகிறது.
- செப்டம்பர் 21 World Peace Day – 2018 (உலக அமைதி தினம் – செப்டம்பர் 21)
No comments:
Post a Comment