Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 23rd September 2018

உலக செய்திகள்
  1. ஐ.நா. பொதுச்சபையின் 73-வது கூட்டம், 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 1 ஆம் தேதி வரை, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற உள்ளது.
  2. நைஜரின் தலைநகரான நியாமேயில் (Niamey) இந்திய அரசாங்கத்தின் மானிய உதவியுடன் மகாத்மா காந்தி சர்வதேச மாநாட்டு மையத்தை (MGICC – Mahatma Gandhi International Convention Center) செயல்படுத்த இந்தியா மற்றும் நைஜர் நாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
தேசிய செய்திகள்
  1. நாட்டிலேயே முதன் முறையாக, உத்திரப்பிரதேச காவல்துறையானது, தொலைபேசி அழைப்பு வாயிலாக முதல் தகவல் அறிக்கை (FIR – First Information Report) பதிவு செய்யும் முறையை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
  2. அணுசக்தி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான பாதுகாப்பு ஒத்துழைப்பில் IAEA-ன் (International Atomic Energy Agency) வேலைகளை வலுப்படுத்தும் வகையில், 62-வது IAEA-வின் பொது மாநாடு ஆஸ்திரியாவின் வியன்னாவில் நடைபெற்றுள்ளது.
  3. தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டமான ஆயுஷ்மான் பாரத்(AB – NHPM : Ayushman Bharat – National Health Protection Agency)–ஐ செயல்படுத்தும் தேசிய சுகாதார நிறுவனமானது(NHA – National Health Agency) பயனாளர்கள் தங்கள் பதிவுகளை சோதித்துக் கொள்ள prnjay.gov.in என்னும் வலைதளத்தையும், 14555 என்ற உதவி எண்ணையும் தொடங்கியுள்ளது.
  4. இந்தியாவின் அண்டை நாடான நேபாளம், வரும் 2020-ம் ஆண்டை “நேபாளத்தை காண வாருங்கள்” என்னும் தலைப்புடன் சுற்றுலா ஆண்டாக அனுசரிக்க தீர்மானித்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. 2022-ஆம் ஆண்டில் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளின் நான்காவது பதிப்பை சீனாவின் ஹான்ங்ஷோ-வில் நடத்த இருப்பதாக ஆசியன் பாரா ஒலிம்பிக் குழு அறிவித்துள்ளது.
  2. FIFA சர்வதேச கால்பந்து அணிகளுக்கான தரவரிசை வரலாற்றில் முதல் முறையாக, பிரான்சு மற்றும் பெல்ஜியம் ஆகிய இரு அணிகள் முதலிடத்தைப் பகிர்ந்துள்ளன.