Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 26 September 2018

உலக செய்திகள்
  1. ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையம் (UNHCR-United Nations High Commissioner for Refugees) வழங்கும் நான்சென் அகதிகள் விருது(Nansen Refugee Award) – 2018, தெற்கு சூடானை சேர்ந்த மருத்துவர் இவான் அடர் அதகா அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  2. நேபாளம் மற்றும் இந்தியா ஆகிய நகரங்களுக்கிடையேயான எல்லை பணிக்குழுவின் (BWG – Boundary Working Group) ஐந்தாவது கூட்டம் நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் நடைபெற்றுள்ளது.
தேசிய செய்திகள்
  1. இந்திய ஆயுதப்படைகளின் தைரியம், வீரம், தியாகம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமாக, செப்டம்பர் 28-30 வரை ‘பாராக்ரம் பர்வ்‘ கொண்டாடப்பட உள்ளது.
  2. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களால் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவின் (IISF-2018) நான்காவது பதிப்பு அக்டோபர் 6 ம் தேதி லக்னோ, உத்திரபிரதேசத்தில் தொடங்கிவைக்கப்படவுள்ளது.
  3. அனைவரையும் உள்ளடக்கிய நிதிச் சேவையின் ஒரு பகுதியாக மத்திய நிதியமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறையும், தேசிய தகவல் மையமும் இணைந்து “ஜன்தன் தர்ஷக்” எனும் செல்பேசி செயலியை உருவாக்கியுள்ளன.
  4. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ,புவி அறிவியல் & சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்றத்திற்கான மத்திய அமைச்சர், டாக்டர் ஹர்ஷ் வர்தன் காற்று மாசு கட்டுப்பாட்டு ‘WAYU’(Wind Augmentation Purifying Unit) சாதனத்தை தில்லியில் திறந்துவைத்தார்.
வர்த்தக செய்திகள்
  1. சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்குள் ஒரு கோடி ரூபாய் வரை கடனுக்கான ஒப்புதல் வழங்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் வழங்கும் உயரிய விருதான ‘ராஷ்ட்ரிய கேல்புரோத்சாஹன் புரஸ்கார்’ எனும் விளையாட்டு மேம்பாடு விருது ஈஷா அவுட்ரீச்க்கு வழங்கப்பட்டுள்ளது.இதையடுத்து விருது வழங்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடந்தது.