Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 4th September 2018

உலக செய்திகள்
 1. கங்கை நதியை தூய்மைப்படுத்தும் முயற்சியில் (கங்கை மிஷன் திட்டம்) இந்தியா உத்தரகண்ட் மாநிலத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக இந்தியாவுக்கு 120 மில்லியன் யூரோ கடனை ஜெர்மனி வழங்கியுள்ளது.
 2. 2018ம் ஆண்டிற்கான பிரஃபுல் பிட்வாய் நினைவு விருதானது சர்வஹாரா ஜன் அண்டோலனின் இணை நிறுவனரான உல்கா மகாஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தேசிய செய்திகள்
 1. சைப்ரஸ்–இந்தியா இடையே சுற்றுச் சுழல் ஒத்துழைப்பு மற்றும் பண மோசடி தடுப்பு தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
 2. ஒரு நாடு; ஒரு கார்டு‘ திட்டத்தை, மத்திய அரசு, விரைவில் அமல்படுத்த உள்ளது. ‘இதற்காக தரப்படும் கார்டை பயன்படுத்தி, ரயில், பஸ், மெட்ரோ ரயில் என, அனைத்து பொது போக்குவரத்து வாகனங்களிலும் செல்ல முடியும்‘ என நிதி ஆயோக் தெரிவித்துள்ளது
 3. மத்திய பிரதேச மாநில அரசானது பெரும் எண்ணிக்கையிலான கற்பிக்கும் திட்டமான ‘மில் பன்ச்சே மத்திய பிரதேசம்’ (குழுவாக படித்தல், மத்தியப் பிரதேசம்) என்னும் திட்டத்தை நடத்தியது.
 4. கடலோரக் காவல் ரோந்துக் கப்பலான ICGS விஜயா (OPV – 2) 2018 ஆகஸ்டு மாதம் 30ம் தேதி இந்தியக் கடற்படையிடம் வழங்கப்பட்டது.
 5. 6வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு மற்றும் 15வது ஆசியான் பொருளாதார மந்திரிகள் கூட்டம் சிங்கப்பூரில் நடைபெற்றுள்ளது. இதில் வணிக மற்றும் தொழிற்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கலந்து கொண்டுள்ளார்.
 6. இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான பினய் குமார் இந்திய அரசின் எஃகுத்துறை அமைச்சகத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 7. 2018-19ம் ஆண்டிற்கான இந்திய வங்கிகள் சங்கத்தின் புதிய தலைவராக பஞ்சாப் தேசிய வங்கியின் மேலாண்மை இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான சுனில் மேத்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
 1. கிரீன்லாண்ட் மற்றும் அண்டார்டிக்காவை உள்ளடக்கும் நிலத்தின் பனிப்பொழிவின் அளவை கண்காணிக்க ஐஸ், கிளவுட் லேண்ட் எலிவேஷன் செயற்கைக்கோளை (ICESAT-2) நாசா அறிமுகப்படுத்தியுள்ளது.
வர்த்தக செய்திகள்
 1. 2017-18 ஆம் நிதியாண்டில் இந்தியாவில் நேரடி அன்னிய முதலீடு செய்துள்ள நாடுகளின் வரிசையில் மொரீஷியஸ் முதலாவது இடத்தைப் பிடித்துள்ளது.
 2. இன்டர்நெட் சொசைட்டி (ISOC) இன்டர்நெட் சேவை வழங்குநர்கள் சங்கம் (ISPAI) இணைந்து பாதுகாப்பு உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை (MANRS) மேம்படுத்துவதற்கான பரஸ்பர ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது
விளையாட்டு செய்திகள்
 1. தென் கொரியாவில் நடைபெற்று வரும் துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப் போட்டியின் மூலமாக, இந்திய வீராங்கனைகள் அஞ்சும் முட்கில் , அபூர்வி சந்தேலா ஆகியோர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பை உறுதி செய்தனர் .
 2. ஜப்பானிய swimmer Ikee Rikako சமீபத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டியின் 18 வது பதிப்பில் மிக மதிப்புமிக்க வீரராக (Most Valuable Player(MVP)) பெயரிடப்பட்டுள்ளது.
 3. பர்முலா-1 கார் பந்தயத்தின் இத்தாலியன் கிராண்ட் பிரிக்ஸ், சுற்றில் மெஸ்சிடஸ் பென்ஸ் அணியின் வீரரான லிவிஸ் ஹமில்டன் வெற்றிபெற்றுள்ளார்.
 4. 2018ம் ஆண்டின் ஆசிய விளையாட்டில் மதிப்பு மிக்க வீரர் விருதை ஜப்பான் நீச்சல் வீராங்கனை இகீ ரிகாகோ (18) வென்றுள்ளார்.
 5. தென்கொரியாவில் நடைபெறும் 52வது ISSF உலக துப்பாக்கி சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் ஜூனியர் பிரிவில் இந்தியா 2 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.
 6. 19வது ஆசிய விளையாட்டு 2022ம் ஆண்டு செப்டம்பர் 10-25 வரை சீனாவின் ஹாங்ஜோவ் நகரில் நடக்க உள்ளது.

No comments: