Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 9th September 2018

உலக செய்திகள்
  1. அலிபாபா நிறுவனத்தின் நிர்வாக அதிகாரிகளில் ஒருவரான ஜாக் மா ஓய்வுபெற்றார்
  2. பல்வேறு நாடுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட ஹெலிகாப்டர்ஸ், போர் விமானம், பீரங்கி உள்ளிட்ட 26 ஆயிரம் விதமான ஆயுதங்கள் மற்றும் ராணுவ சாதனங்கள் கொண்ட “சர்வதேச ராணுவ கண்காட்சி – 2018” ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடைபெற்றது.
  3. இந்தியா மற்றும் பல்கேரியா நாடுகளுக்கிடையில் அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுலா அணுசக்தி மற்றும் பிற துறைகளில் கூட்டுறவை மேற்கொள்ளும் வகையில் இருநாட்டு தலைவர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
  4. SLINEX – 2018 – இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையேயான நல்லுறவினை வலுப்படுத்துவது மற்றும் கடல் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது தொடர்பான கூட்டு கடற்படை போர் பயிற்சி இலங்கையில் உள்ள திரிகோணமலையில் நடைபெறுகிறது .
  5. 2000க்கும் அதிகமான பிரதிநிதிகள் பங்கேற்கும் உலக இந்து காங்கிரஸ் மாநாடு அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் நடைபெற்றது
தேசிய செய்திகள்
  1. கேரளாவில் உள்ள கிராம சுற்றுச்சூழல் வளர்ச்சிக்காக ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் ‘மலநாடு மலபார் கடற்பயன சுற்றுலா’ என்னும் திட்டத்திற்கு மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
  2. 2017ம் ஆண்டில் அதிகமாக விமான பயணம் மேற்கொண்டவர்களில் உலக அளவில் அமெரிக்கர்கள் முதலிடத்திலும், சீனர்கள் 2ம் இடத்திலும் இந்தியர்கள் 3ம் இடத்திலும் உள்ளனர் என சர்வதேச விமான போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
  3. சர்வதேச வான் போக்குவரத்து உச்சி மாநாடு புது டெல்லியில் நடைபெற்றுள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. நார்வே நிறுவனமான ஆஃப்சோர் சென்சிங் ஏஎஸ் என்ற நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்ட ‘SB Met’ என்ற பட்கானது, அட்லாண்டிக் கடந்த முதல் ஆளில்லா படகாக (3000 கி.மீ. கடந்து) சாதனைப் படைத்துள்ளது.
வர்த்தக செய்திகள்
  1. மிகப் பெரும்பணக்காரர்கள் அதிகம்பேர் வாழும் நகரங்களின் தரவரிசையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தைச் சீனாவின் ஹாங்காங் முந்தியுள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. தென்கொரியாவின் சாங்வான் நகரில் நடைபெற்று வரும் சாம்பியன் ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஜூனியர் பிரிவில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிளில் இந்தியாவின் ஹிருதய் ஹஸாரிகா தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
Post a Comment