உலக செய்திகள்
- ஜப்பான் நாட்டின் மேற்குப் பகுதியில் ‘ஜெபி’ என்ற புயல் மிகப் பெரிய சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.
- விண்வெளித் துறையில் இந்தியா, பிரான்ஸ் நாடுகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மேலும் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் இணைந்து செயல்படுத்துவதற்கான புரிந்துணர்;வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்
- டிஜிட்டல் பத்திரிக்கை யுகத்தில், அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் NRI Pulse என்ற பத்திரிக்கையை நடத்திய முதல் இந்திய பெண் என்ற பெருமையை வீணா ராவ் என்ற பெண்மணி பெற்றுள்ளார்.
தேசிய செய்திகள்
- தமிழ்நாட்டின் 13 கடலோர மாவட்டங்களையும் தீவுகளையும் உள்ளடக்கிய கடல்சார் சூழலைப் பாதுகாப்பதற்காக, தமிழ்நாடு அரசு, கடலோர மண்டல மேலாண்மை திட்டத்தின் (Coastal zone Management) இறுதி வரைவை மத்திய சுற்றுச்சூழல் வனங்கள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது.
- அலுவல் பணியில் ஹிந்தி மொழியை செயல்படுத்துவது தொடர்பான செயல்பாட்டையும் சிக்கல்களையும் பற்றி விவாதிக்க அலுவல் மொழித்துறையின் முதல் சீராய்வுக் கூட்டம் உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் தலைமையில் நடைபெற்றது.
- சுனாமி பேரிடர் ஒத்திகை மற்றும் மீட்பு நடடிவடிக்கை – 2018 (Coastal zone Management) இந்தியா முழுவதும் உள்ள கடலோர பகுதிகளில் சுனாமி பேரிடர் ஒத்திகை மற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
- இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கிடையேயான பாதுகாப்புத் துறை சம்பந்தமான டூ ப்ளஸ் டூ பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெற்றது.
- ஆசிய அளவில் அலுவலக வாடகையில் அதிக பயன்பெற்ற நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் பெங்களுரு நகரம் முதலிடம் பிடித்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
- தென்கொரியாவின் சாங்வான் நகரில் நடைபெற்று வரும் 52வது சர்வதேச தப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் சவுரப் சவுத்ரி தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
No comments:
Post a comment