Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 11th October 2018

உலக செய்திகள்
  1. சுற்றுலாத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது, சுற்றுலா தொடர்பான தகவல்கள் மற்றும் தரவுகளைப் பரிமாறிக் கொள்வது, சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் முதலீடுகளை அதிகரிப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் ருமேனியா நாடுகளுக்கிடையே கையெழுத்தாகி உள்ளது.
தேசிய செய்திகள்
  1. சர்வதேச நாடுகளின் சபையான ஐ.நா., இந்தியாவுக்கான நிலையான வளர்ச்சி இலக்குகள் எனப்படும் SDS (Sustainable Development Goals) இன் முதல் இளம் வர்த்தக சாம்பியனாக (First Youth Business Championship) மானசி கிர்லோஸ்கரை (Manasi Kirloskar) தேர்வு செய்துள்ளது.
  2. இந்தியாவின் முதல் ‘மெத்தனால் சமையல் எரிபொருள் திட்டம்’ (India’s First Methanol Cooking Fuel Program), அசாம் மாநிலத்தில் நாம்ரூப் நகரில் அசாம் பெட்ரோலிய நிறுவனத்தால் தொடங்கப்பட்டுள்ளது.
விருதுகள்
  1. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் பல்வேறு பிரிவுகளின் கீழ், ஸ்வச்சதா ஹை சேவா (Swachhta Hi Seva) என்ற கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு தூய்மையான வளாகத்திற்கான தரநிலைகளை (Swachh Campus ranking) அறிவித்துள்ளது.
  2. இந்திய மெடல்கள் மற்றும் ஃபெரோ அலாய்ஸ் நிறுவனத்தின் அறக்கட்டளைப் பிரிவால் (IMPacT) வழங்கப்படும் உயரிய விருதான, 2018ம் ஆண்டிற்கான 26வது ஏகலபியா விருது (Ekalabya Award – 2018) ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹாக்கி வீரரான லீலிமா மின்ஸ் பெற உள்ளார்.
நியமனங்கள்
  1. இந்திய தலைமைப் புள்ளியியல் அலுவலராக ‘பிரவீன் ஸ்ரீவஸ்தவா’ (Chief Statistician of India) நியமிக்கப்பட்டுள்ளார் முன்னதாக இப்பொறுப்பில் இருந்த டி.சி.ஏ ஆனந்த், என்பவருக்குப் பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார் பிரவீன் ஸ்ரீவஸ்தவா, 2020 ஆகஸ்ட் வரை அப்பதவியில் இருப்பார்.
  2. மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வரிசையில் அட்டானிக் ஜெனரலுக்கு அடுத்தபடியாக உள்ள சொலிசிட்டர் ஜெனரல் பதவிக்கு, “துஷார் மேத்தா” என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்
முக்கிய தினங்கள்
  1. உலக மனநல தினம் (World Mental Health Day) – அக்டோபர் 10
Post a Comment