Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 15th October 2018

உலக செய்திகள்
  1. ஆட்கடத்தலை தடுப்பதற்காக இலங்கை அரசுக்கு, ஆஸ்திரேலியா உதவி செய்யவுள்ளது. அதன் ஒருபகுதியாக வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகளின் திறன்களை மேம்படுத்துவதற்கான இணைய வழி பயிற்சியை தொடங்க உள்ளது.
  2. இந்தியா மற்றும் அஜர்பைஜன் (Azerbaijan) நாடுகளுக்கு இடையே வணிகம் மற்றும் பொருளாதாரம்,அறிவியல் & தொழில்நுட்பம் தொடர்பான 5-வது கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது.
தேசிய செய்திகள்
  1. வேளாண்மை மற்றும் சுகாதாரத் துறையில் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்காக செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் மைக்ரோசாப்ட் இந்தியா மற்றும் நிதிஆயோக் (NITI Aayog) ஆகிய அமைப்புகளுக்கிடையே கையெழுத்தாகி உள்ளது.
  2. ஐக்கியநாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF – United Nation’s Children’s Fund) மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) ஆகியவை இணைந்து, இந்தியாவை “போலியோ இல்லாத நாடாக”அறிவித்துள்ளது.
  3. இயற்கை பேரிடரின் போது ஏற்படும் சேதங்கள், வணிகரீதியிலான பாதிப்புகள் உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு, ஐ.நா. மன்றம் வெளியிட்டுள்ள, இயற்கை பேரழிவுகள் அதிகம் தாக்கும் நாடுகளில் அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகியநாடுகள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளது.
  4. திருப்பூர் சாய் கிருஷ்ணா நுண்கலைக் கூடத்தின் துணைநிறுவனர் சந்தியா சங்கருக்கு‘நாட்டிய கலா ரத்னா’,‘நாட்டியசிரோமணி’என்ற விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. அக்டோபர் 21-ல் புதுதில்லியில் நடைபெறவுள்ள “Delhi half – மராத்தான்”போட்டியின்; நல்லெண்ணத் தூதராக அமெரிக்க தடகள வீரர் “சான்யா ரிச்சர்ட்ஸ் ராஸ்”என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  2. ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் செர்பியவீரர் நோவக் ஜோகோவிச், குரோஷிய வீரர் போர்னாகோரிக்-யை (BornaCoric) வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்
முக்கிய செய்திகள்
  1. உலக தர நிர்ணய தினம் – அக்டோபர் 14 (World Standards Day)

Post a Comment