Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 20th October 2018

உலக செய்திகள்
  1. பின்லாந்து நாட்டின் வல்லுனர்கள் குழுவான செயற்கை நுண் அறிவாற்றல் (artificial intelligence) துறை வெளியிட்டுள்ள செயற்கை நுண்ணறிவாற்றலில் சிறந்த நாடுகளின் பட்டியலில், இந்தியா 13வது இடத்தைப் பிடித்துள்ளது.
  2. வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, சுற்றுலா ஆகிய துறைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தி ஒத்துழைப்பு நல்கிட, 12வது ஆசிய-ஐரோப்பிய நாடுகளுக்கான மாநாடு பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் அக்டோபர் 18 அன்று தொடங்கி உள்ளது.
  3. உலக நாடுகளுக்கிடையே பொருளாதார வளர்ச்சி ரீதியிலான போட்டி நிலவரம் குறித்து சர்வதேச பொருளாதார மையம் வெளியிட்டுள்ள சர்வதேச பொருளாதார போட்டிக் குறியீடு பட்டியலில் இந்தியா 58வது இடத்தைப் பிடித்துள்ளது.
  4. அமெரிக்காவின் ஹீஸ்டன் நகரில் இருந்து வெளிநாடுகளுக்கு சிறுமிகள், பெண்கள் உட்பட சட்டமீறலாக நடைபெற்று வரும் ஆள்கடத்தலை தடுத்ததற்காக, இந்திய வம்சாவளி பெண்ணான “மினால் பட்டேல் டேவிஸ்” என்பவருக்கு அமெரிக்க ஜனாதிபதியின் உயரிய விருது (Presidential Medal for Combating Human Trafficking) வழங்கப்பட்டுள்ளது.
தேசிய செய்திகள்
  1. Mee Too இயக்கத்தின் மூலமாக வரும் பாலியல் புகார் குறித்து விசாரிப்பதற்காகவும், பணியிடங்களில் பாலியல் புகார்களுக்காக புதிய சட்டங்களை இயற்றுவது குறித்து பரிசீலிக்கவும், இந்திய உள்துறை அமைச்சர் “ராஜ்நாத் சிங்” தலைமையில் மூன்று அமைச்சர்கள் கொண்ட குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.
  2. 100 சதவீதம் வீடுகளை மின்மயமாக்கலை அடைவதற்காக மின்விநியோக நிறுவனங்கள் (DISCOMs – Distribution Companies), மாநிலங்களின் மின்துறைகள் மற்றும் அவற்றின் ஊழியர்களுக்கு உத்வேகத்தை அழிப்பதற்காக மத்திய அரசானது சௌபாக்கியா திட்டத்தின் கீழ் விருது வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  3. உலகிலேயே அதிக உயரமான இடத்தில் இரயில் வழித்தடம், இந்தியாவில் உள்ள இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஷ்பூர் – மணாலி – லே ஆகிய இடங்களை இணைக்கும் வகையில் 465 கி.மீட்டர் தூரத்திற்கு சுமார் 5 ஆயிரத்து 360 மீட்டர் உயரத்தில் இரயில் வழித்தடத்தை அமைக்க உள்ளதாக இரயில்வேத்துறை அறிவித்துள்ளது.
  4. குறிப்பிட்ட புவியியல் அமைப்பின் சிறப்புத்தன்மை சார்ந்து உற்பத்தியாகும் பொருட்களுக்கு அவற்றின் தரம் சார்ந்து வழங்கப்படும் புவிசார் குறியீடு (Geographical Indicatio) பீகார் மாநிலத்தில் விளையும் ஷாஹி லிச்சி (Shahi Litchi) பழத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. அர்ஜெண்டினாவின் பியூனஸ் ஏர்ஸ் நகரில் நடைபெற்று வரும் இளைஞர் (யூத்) ஒலிம்பிக் போட்டியில், ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் நடைபந்தயத்தில் இந்திய வீரர் சுராஜ் பன்வார் வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார்.
Post a Comment