Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 21st October 2018

உலக செய்திகள்
  1. இந்தியப் பெருங்கடல் மீதான இரண்டு நாள் சர்வதேச மாநாடு (International Conference on Indian Ocean) இலங்கையின் கொழும்புவில் நடைபெற்றது.
  2. சீனா – ஹாங்காங் இடையே போக்குவரத்தை எளிமைப்படுத்தும் விதமாக வரும் அக்டோபர் 24ம் தேதி ஜூகாய் – மகோ பாலம் திறக்கப்பட உள்ளது. 55 கி.மீ. நீளம் கொண்ட இந்த பாலம் உலகின் நீளமான பாலமாகக் கருதப்படுகிறது.
தேசிய செய்திகள்
  1. தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் அடையாள அட்டையை வழங்கிய முதலாவது பள்ளியாக போரூரைச் சேர்ந்த அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வாகியுள்ளது.
  2. பாதுகாப்பான உணவை உண்ணுதல் மற்றும் ஆரோக்கியமாக இருத்தலைப் பற்றி மக்களுக்கு உணர்த்துவதை நோக்கமாகக் கொண்டு, மத்திய அரசானது ‘ஸ்வச் பாரத் யாத்ரா’ (Swachh Bharat Yatra) என்ற தேசிய அளவிலான பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. பயிர்க் கதிர்கள் எரிக்கப்படுவதைத் தடுப்பதற்காக 3 கைப்பேசி செயலிகளை பஞ்சாப் மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
  2. புதன் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய விண்வெளி ஆய்வு மையங்கள் இணைந்து உருவாக்கிய “பெபிகொலம்போ” விண்கலம் அக்டோபர் 20 அன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
  3. வானிலும், நீரிலும் செலுத்தக்கூடிய உலகின் மிகப்பெரிய விமானமான ஏஜி-600 (AG-600)-ஐ சீனா-வானது அக்டோபர் 20 அன்று வெற்றிகரமாக சோதனை ஓட்டத்தை நிறைவு செய்துள்ளது.
  4. இந்திய கட்டிடத் துறையில் புதுமையான அமைப்புகள் மற்றும் கட்டுமான நுட்பங்களை பயன்படுத்துவதில் முன்னோடியாக இருந்த அனுமோலு ராமகிருஷ்ணனின் சுயசரிதையான ‘பில்டிங் எ லெகஸி’ (Building a Legacy) என்னும் புத்தகத்தை குடியரசு துணைத் தலைவர் வெளியிட்டுள்ளார்.
Post a Comment